ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!

Updated: Sat, May 07 2022 14:29 IST
Image Source: Google

ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெற அனைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வருகிறது. அந்தவகையில் இன்று நடைபெறும் 53ஆவது போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • இடம் - எம்சிஏ மைதானம், புனே
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

கேஎல் ராகுல் தலமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 7 வெற்றி, 3 தோல்வி என்று 14 புள்ளிகளுடன் 2ஆவது இடம் வகிக்கிறது. அணியின் பேட்டிங்கில் கேஎல் ராகுல், டி காக், ஹூடா, ஸ்டோய்னிஸ் இருப்பது வலுசேர்க்கிறது. 

அதேபோல் பந்துவீச்சில் துஷ்மந்தா சமீரா, ரவி பிஷ்னோய், மோஹ்சின் கான் ஆகியோர் இருப்பது அணியின் பலமாக பார்க்கப்படுகிறது. 

அதேசமயம் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 போட்டிகளில் 6 தோல்வி, 4 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலின் 8ஆவது இடத்தில் உள்ளது.

அணியின் பேட்டிங்கில் ஆரோன் ஃபிஞ்ச், இந்திரஜித், ஸ்ரேயாஸ் ஐயர், ஆண்ட்ரே ரஸ்ஸலும், பந்துவீச்சில் சுனில் நரைன், உமேஷ் யாதவ் ஆகியோரும் எதிரணிக்கு சவாலளிப்பார்கள் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. 

உத்தேச அணி

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - குயின்டன் டி காக், கேஎல் ராகுல், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, ஆயுஷ் பதோனி, ஜேசன் ஹோல்டர், துஷ்மதா சமீரா, அவேஷ் கான் / கே கவுதம், மொஹ்சின் கான், ரவி பிஷ்னோய்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பாபா இந்திரஜித், ஆரோன் பின்ச், ஸ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா, ரின்கு சிங், சுனில் நரைன், அனுகுல் ராய், ஆண்ட்ரே ரசல், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, சிவம் மாவி

ஃபேண்டஸீ லெவன்

  •      விக்கெட் கீப்பர்கள் - கேஎல் ராகுல், குயின்டன் டி காக்
  •      பேட்டர்ஸ் - ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா, மார்கஸ் ஸ்டோனிஸ்
  •      ஆல்-ரவுண்டர்கள் - சுனில் நரைன், ஆண்ட்ரே ரசல்
  •      பந்துவீச்சாளர்கள் - டிம் சவுத்தி, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை