ராகுல் ரன் குவிக்கும் கேப்டனாக இருக்க வேண்டும் - கவுதம் கம்பீர்!

Updated: Wed, Mar 23 2022 14:11 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் வருகிற 26ஆம் தேதி தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில் புதிய அணியாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் விளையாடுகிறது.

லக்னோ அணிக்கு லோகேஷ் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த அணிக்கு ஆலோசகராக முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் உள்ளார்.

லக்னோ தலைமை உள்ளிட்டவைகள் குறித்து கவுதம் காம்பீர் பேசும் போது, “என்னை பொறுத்தவரை கேப்டனாக இருக்கும் ராகுலைவிட, பேட்டிங்கில் ரன் குவிக்கும் கேப்டனாக இருக்கும் ராகுலாக இருப்பது முக்கியம். ராகுல் தனது அணுகுமுறையில் அச்சமின்றி இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்காக அவருக்கு எல்லா சுதந்திரமும் கிடைக்கும்.

எந்தவொரு கேப்டனும் துணிச்சலான முடிவுகளை எடுக்க கற்றுக்கொள்ள வேண்டும். அதுபோன்று ராகுல் செயல்பட வேண்டும் என்று விரும்புகிறேன். நீங்கள் ரிஸ்க் எடுக்காவிட்டால், நீங்கள் வெற்றி பெறுவீர்களா இல்லையா என்பது உங்களுக்கு தெரியாது. குயிண்டன் டி காக் விக்கெட் கீப்பராக செயல்படுவார். 

ஆனால் லோகேஷ் ராகுல் பேட்டிங் மற்றும் கேப்டன் பொறுப்பில் கவனம் செலுத்துவார். தேசிய அணியில் இடம் பெறுவதற்காக நீங்கள் ஐ.பி.எல்.லில் விளையாட வேண்டும் என்று நான் ஒரு போதும் நம்பவில்லை.

ஐபிஎல் என்பது ஒருவரின் காயத்தை வெளிப்படுத்தும் ஒரு தளம். ஒருவர் கேப்டனாக வளர முடியும். ஆனால் ஐ.பி.எல். போட்டி நீங்கள் இந்திய அணி கேப்டனாவதற்கு உதவும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை