உலகக்கோப்பை முடிவை வைத்து திறனை மதிப்பிடாதீர் - ரவி சாஸ்திரி காட்டம்!
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தோற்றது. இதையடுத்து டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகினார் விராட் கோலி.
இதையடுத்து விராட் கோலிக்கும் பிசிசிஐக்கு இடையேயான மோதல் வெளிப்படையாக தெரிந்தது. மேலும் விராட் கோலிக்கு ஆதரவாகவும், பிசிசிஐக்கு எதிராகவும் விவாதங்கள் அறங்கேரிவருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, “முக்கிய வீரர்களான கங்குலி, டிராவிட், அனில் கும்ப்ளே, லக்ஷ்மண், ரோஹித் சர்மா ஆகியோர் இதுவரை உலகக் கோப்பைப் போட்டியை வென்றதில்லை. இதற்காக அவர்கள் மோசமான வீரர்கள் என்று அர்த்தமில்லை.
கபில் தேவ், தோனி என உலகக் கோப்பையை வென்ற இரு கேப்டன்கள் தான் நம்மிடம் உள்ளார்கள். முதல் உலகக் கோப்பையை வெல்ல சச்சின் டெண்டுல்கர் 6 உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாட வேண்டியிருந்தது. உலகக் கோப்பையைக் கொண்டு ஒரு வீரரை மதிப்பிடக் கூடாது. எப்படி விளையாடுகிறார், எவ்வளவு காலம், எந்த முறையில் விளையாடுகிறார் என்பதை வைத்தே ஒரு வீரரை மதிப்பிட வேண்டும்” என்று தெரிவித்தார்.