பந்தை பிடிக்கும் முயற்சியில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட ரபாடா - ஜான்சென் - வைரலாகும் காணொளி!

Updated: Mon, Jun 24 2024 12:03 IST
Image Source: Google

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிகெக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியானது 3 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இரண்டாவது அணியாக அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் கைல் மேயர்ஸ், ரோஸ்டன் சேஸ் ஆகியோரைத் தவிர்த்து மற்ற விரர்கள் சோபிக்க தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியானது 8 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

அந்த அணியில் அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 52 ரன்களையும், கைல் மேயர்ஸ் 35 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக தப்ரைஸ் ஷம்ஸி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியானது முதல் இரண்டு ஓவர்கள் முடிவிலேயே ரீஸா ஹென்ரிக்ஸ் மற்றும் குயிண்டன் டி காக் ஆகியோரது விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் மழை பெய்த காரணத்தால் டக்வொர்த் லூயிஸ் முறைப்பாடி தென் ஆப்பிரிக்க அணிக்கு 17 ஓவர்களில் 123 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியில் ஐடன் மார்க்ரம் 18 ரன்களிலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 29 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 22 ரன்களையும் சேர்க்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்கோ ஜான்சென் 21 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 16.1 ஓவர்களில் இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தி வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் அரையிறுதிச்சுற்றுக்கும் முன்னேறியது. இதன்மூலம் 2014ஆம் ஆண்டிற்கு பிறகு தென் ஆப்பிரிக்க அணி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

இந்நிலையில் இப்போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் கைல் மேயர்ஸ் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் பந்தை தூக்கி அடிக்க, அதனை பிடிக்கும் முயற்சியில் தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் மார்கோ ஜான்சன் மற்றும் காகிசோ ரபாடா இருவரும் முயற்சித்தினர். இதில் மார்கோ ஜான்சென் பந்தை பிடிக்க முயன்ற சமயத்தில் அப்போது மறுமுனையில் இருந்து ஓடி வந்த காகிசோ ரபாடாவும் பந்தை பிடிக்கும் முயற்சியில் ஜான்சென் மீது மோதினார். இதனால் இருவரும் ஒருவருக்கு ஒருவரு நேருக்கு நேர் மோதி கீழே விழுந்ததுடன், பந்தையும் பிடிக்க தவறினர். இந்நிலையில் இருவரும் நேருக்கு நேர மோதிய காணொளியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை