ஐசிசி உலகக்கோப்பை 2023: வெளியானது போட்டி அட்டவணை; அக்.15-ல் இந்தி-பாக் போட்டி!

Updated: Tue, Jun 27 2023 12:53 IST
Image Source: Google

இந்தாண்டு ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது நவம்பர் 19ஆம் தேதி இறுதிப்போட்டியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை ஐசிசி இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியும், கடந்த தொடரில் இரண்டாம் இடம் பிடித்த நியூசிலாந்து அணியுடன் அஹ்மதாபாத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றது. இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடவுள்ளது. 

 

அதேபோல் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி அக்டோபர் 15ஆம் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இத்தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி நவம்பர் 15ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்திலும், இரண்டாவது அரையிறுதிப்போட்டி நவம்பர் 16ஆம் தேதி கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

 

இத்தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 19ஆம் தெதி அஹமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரின் அனைத்து போட்டிகளும் இந்தியாவில் நடைபெறவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::