BAN vs SL, 2nd Test: மேத்யூஸ், தனஞ்செய அரைசதம்; தப்பிய இலங்கை!

Updated: Wed, May 25 2022 19:31 IST
Image Source: Google

வங்கதேசம் - இலங்கை அணிகள் இடையிலான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தாக்காவில் நடைபெறுகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்தது வங்கதேசம்.

ஆரம்பத்தில் அந்த அணியினர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 24 ரன்னுக்குள் 5 விக்கெட் இழந்து தத்தளித்தது. 6-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹிமுடன் கைகோர்த்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் சதமடித்தனர்.

முதல் நாள் முடிவில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது. முஷ்பிகுர் ரஹிம் 115 ரன்னுடனும், லிட்டன் தாஸ் 135 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை அணி சார்பில் கசுன் ரஜிதா 3 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்நிலையில், நேற்று 2ஆவது நாள் ஆட்டம் நடந்தது. லிட்டன் தாஸ் 141 ரன்னில் அவுட்டானார். அடுத்து ஆடிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், வங்கதேச அணி 365 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முஷ்பிகுர் ரஹீம் 175 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் . இலங்கை சார்பில் ரஜித 5 விக்கெட்டும், ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடியது. தொடக்க வீரர்களாக ஒஷாதா ஃபெர்னான்டோ, கேப்டன் திமுத் கருணரத்னே களமிறங்கினார். சிறப்பாக விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தனர். அரைசதம் அடித்த ஒஷாதா ஃபெர்னான்டோ 57 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குசால் மெண்டிஸ் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய கருணரத்னே அரைசதம் அடித்தார்.

இதனால் இரண்டாம் நாள் முடிவில் இலங்கை 2 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. இதில் கருணரத்னே 70 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் களமிறங்கிய இலங்கை வீரர் கசுன் ரஜிதா ரன் ஏதுமின்றியும், குசால் மெண்டிஸ் 11 ரன்களிலும் விக்கெட்டை இழந்தார். அதைத்தொடர்ந்து 80 ரன்களில் கேப்டன் திமுத் கருணரத்னேவும் விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த ஏஞ்சலோ மேத்யூஸ் - தனஞ்செய டி சில்வா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து விக்கெட் இழப்பை தடுத்தனர். தொடர்ந்து விளையாடிய இருவரும் அரைசதம் கடக்க அணியின் ஸ்கோரும் 250 ரன்களைக் கடந்ததது.

இதையடுத்து 58 ரன்கள் எடுத்திருந்த தனஞ்செய டி சில்வா ஆட்டமிழந்தார். இதன்மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்களைச் சேர்த்துள்ளது.

இதில் ஏஞ்சலோ மேத்யூஸ் 58 ரன்களுடனும், தினேஷ் சண்டிமல் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை