இனி வரும் போட்டிகளிலும் இந்த வெற்றி தொடரும் - ஜோனதன் டிராட்!
இந்தியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெற்ற 13வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் சிறப்பாக விளையாடி 284 ரன்கள் சேர்த்தது.
அதிகபட்சமாக ரஹமதுல்லா குர்பாஸ் 80 ரன்களும் இக்ரம் கில் 58 ரன்களும் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஆதில் ரஷித் 3 விக்கெட்களை சாய்த்தார். ஆனால் 285 ரன்கள் துரத்திய இங்கிலாந்து ஆரம்ப முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து ஆப்கானிஸ்தானின் தரமான சுழல் பந்து வீச்சில் 40.3 ஓவரில் 215 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது.
உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி சிறிய அணிகளிடம் தோல்வியடைவது முதல்முறையல்ல. ஏற்கனவே வங்கதேச அணியிடம் இரு முறையும், அயர்லாந்து அணியிடம் ஒரு முறையும் தோல்வியடைந்திருக்கின்றன. இந்த 3 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி தோல்வியடைந்ததற்கு ஆனால் ஆஃப்கானிஸ்தான் அணியிடம் அடைந்த தோல்விக்கு, இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜோனதன் டிராட் முக்கிய காரணமாக உள்ளார்.
இங்கிலாந்து அணியின் பேர்ஸ்டோவ், பட்லர், ஸ்டோக்ஸ், ரஷீத், மொயின் அலி உள்ளிட்டோர் இளம் வீரர்களாக இருந்த போது, இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்களில் ஒருவராக இருந்தவர் ஜோனதன் டிராட். இதனால் இங்கிலாந்து அணியின் பிரச்சனைகள், அவர்களின் தயாரிப்புகள் அத்தனையும் ஜானதன் ட்ராய் அறிந்தவர். இவர் தற்போது ஆஃப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இதனால் ஜோனதன் டிராட்பங்கும் ஆஃப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இங்கிலாந்து அணியுடனான வெற்றிக்கு பின் பேசிய ஜோனதன் டிராட், “ஆஃப்கானிஸ்தான் அணியின் இந்த வெற்றி உலகக்கோப்பை தொடரில் மட்டுமல்லாமல், அடுத்தடுத்து விளையாடும் தொடர்களிலும் எதிரொலிக்கும். இந்த வெற்றியை வீரர்கள் நிச்சயம் கொண்டாட வேண்டும். அனைத்து ஆஃப்கான் வீரர்களுக்கும் அதற்கான சுதந்திரத்தை வழங்க போகிறேன். சென்னை போவதற்ல்கு முன் அனைத்து வீரர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
இங்கிலாந்து அணி மட்டுமல்லாமல் எந்த அணியையும் ஆஃப்கானிஸ்தான் அணியால் வீழ்த்த முடியும். அவர்கள் அந்த அளவிற்கு பயிற்சியையும், முயற்சியையும் செய்கிறார்கள். அவர்களுக்கு பயிற்சிக்கு கிடைத்த பலன் தான் இந்த வெற்றி. இந்த வெற்றியை தொடர்ந்து பெறுவதற்கு கூடுதலாக நாங்கள் செயல்பட வேண்டும். அதேபோல் ஆஃப்கான் வீரர்கள் வெறும் வெற்றிக்காக மட்டும் கிரிக்கெட்டை விளையாடவில்லை.
சொந்த நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடரால் மிகவும் சோர்ந்து போயுள்ள மக்களுக்கு சிறிது மகிழ்ச்சியை கொடுப்பதற்காக விளையாடுகிறார்கள். ஆஃப்கானிஸ்தானில் உள்ள குழந்தைகள் ஒவ்வொரின் கைகளிலும் பேட்டையும், பந்தையும் எடுத்து அனைத்து பகுதிகளிலும் விளையாட வேண்டும் என்ற லட்சியத்துடன் விளையாடுகிறார்கள்” என்று கூறியுள்ளார்.