ஐபிஎல் ‘எல் கிளாசிகோ’ - மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்!

Updated: Sat, Apr 08 2023 12:23 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் ‘எல் கிளாசிகோ’ என்றழைக்கப்படும் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. மேலும் ஐபிஎல் தொடரின் 1000ஆவது போட்டி இது என்பதாலும் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
  • இடம் - வான்கடே மைதானம், மும்பை
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

மும்பை இந்தியன்ஸ் அணி, முதல் போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக தோற்க முக்கிய காரணம், 3 பேட்டர்கள் சொதப்பியதுதான். ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர்தான் அந்த மூன்று பேர். இவர்கள் சமீப காலமாகவே பார்ம் அவுட்டில் இருக்கிறார்கள். உலகின் நம்பர் 1 டி20 பேட்டரான சூர்யகுமார் யாதவ், கடந்த 5 சர்வதேச போட்டிகளில் வெறும் 23 ரன்களை மட்டும்தான் சேர்த்துள்ளார். அதில், மூன்றுமுறை கோல்டன் டக்கும் ஆகியிருக்கிறார். இப்படி சூர்யகுமார் பார்ம் அவுட்டில் இருப்பது, மும்பை அணிக்கு பெரும் பின்னடைவுதான்.

இதுபோக, 15.25 கோடிக்கு வாங்கப்பட்ட இஷான் கிஷன், கடைசியாக நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் 3, 1, 19, 4, 17, 8*, 5, 1, 2 போன்ற சொற்ப ரன்களை மட்டும்தான் சேர்த்திருக்கிறார். ஆர்சிபிக்கு எதிராக முதல் லீக் போட்டியில்கூட 10 ரன்களைத்தான் இவரால் எடுக்க முடிந்தது. 15 கோடிக்கு வாங்கப்பட்ட வீரரிடம், மும்பை அணி நிர்வாகம் இன்னமும் கூடுதலான செயல்பாட்டத்தைதான் எதிர்பார்க்கும்.

மறுபக்கம் கேப்டன் ரோஹித் ஷர்மா. அவர் சமீப காலமாகவே சர்வதேச போட்டிகளில் பெரிய ஸ்கோர் அடித்தது கிடையாது. ஆர்சிபிக்கு எதிராக முதல் லீக் போட்டியில்கூட 10 பந்துகளில் ஒரு ரன்னை மட்டும் சேர்த்து ஆட்டமிழந்தார். அவர் அனுபவமிக்க ஆட்டகாரர் என்பதால், இந்த சரிவில் இருந்து கம்பேக் கொடுக்க முடியும். பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் ஜோஃப்ரா ஆர்ச்சர், அர்ஷத் கான், பியூஷ் சாவ்லா, ரைலி மெரிடித் ஆகியோர் உள்ளனர். 

அதேசமயம் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸுடன் தோல்வியைத் தழுவினாலும், லக்னோவுக்கு எதிராக சிறப்பாக விளையாடி முதல் வெற்றியைப் பெற்று அசத்தியது. அணியின் பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட் உச்சகட்ட ஃபார்மில் இருப்பது அணிக்கும் மிகப்பெரும் சதாகமாக உள்ளது. 

அவரைத்தாண்டி டெவான் கான்வே, அம்பத்தி ராயூடு, மொயீன் அலி, எம் எஸ் தோனியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், பென் ஸ்டோக்ஸ், ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் பேட்டிங்கில் சோபிக்க வேண்டியா கட்டாயத்தில் உள்ளனர். பந்துவீச்சில் ரஜ்வர்தன் ஹங்கேகர், துசார் தேஷ்பாண்டா, தீபக் சஹார் ஆகியோர் ரன்களைக் கைப்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். 

மேலும் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர சிசாண்டா மகாலா அணியில் இணைந்திருப்பதால், இன்றைய போட்டியில் மிட்செல் சாண்டனருக்கு பதிலாக பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவ்விரு அணிகளுக்கும் ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 34
  • மும்பை இந்தியன்ஸ் - 20
  • சென்னை சூப்பர் கிங்ஸ் - 14

உத்தேச லெவன்

மும்பை இந்தியன்ஸ் - ரோஹித் சர்மா (கே), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், கேமரூன் கிரீன், திலக் வர்மா, டிம் டேவிட், நெஹால் வதேரா, ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, ஜோஃப்ரா ஆர்ச்சர், அர்ஷத் கான்.

சென்னை சூப்பர் கிங்ஸ் - டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(கே),ஷிவம் துபே, மிட்செல் சான்ட்னர்/ சிசாண்டா மகாலா, தீபக் சாஹர், ஆர்எஸ் ஹங்கர்கேகர்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - டெவான் கான்வே
  • பேட்டர்ஸ் – சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, சிவம் துபே
  • ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, கேமரூன் கிரீன்
  • பந்துவீச்சாளர்கள் - ஜோஃப்ரா ஆர்ச்சர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், அர்ஷத் கான்

கேப்டன்/துணைக்கேப்டன் - ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை