ஐபிஎல் 2021: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச பிளேயிங் லெவன்!
ஐபிஎல் 14ஆவது சீசனில் முதல் அணியாக சிஎஸ்கே பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிட்டது. டெல்லி கேபிடள்ஸ் அணியும் கிட்டத்தட்ட பிளே ஆஃபிற்கு முன்னேறுவது உறுதியாகிவிட்டது. ஆர்சிபி அணியும் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும்.
ஆனால் 4ஆவது அணியாக பிளே ஆஃபிற்கு செல்ல, மும்பை இந்தியன்ஸ், கேகேஆர், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
புள்ளி பட்டியலில் சுவாரஸ்யமான கட்டத்தில் இருக்கும் இந்த சூழலில், இன்று ஷார்ஜாவில் நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் டெல்லி கேபிடள்ஸும் மோதுகின்றன. இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும். மும்பை அணி வெற்றி பெற்றால் பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்கும்.
புள்ளி பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த முக்கியமான போட்டியில் வெற்றிபெறும் முனைப்பில் தான் இரு அணிகளுமே களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. கடந்த போட்டியில விளையாடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் அந்த அணி களமிறங்கும். அதேபோல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிலும் எந்த மாற்றமும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ் : ரோஹித் சர்மா(கேப்டன்), குயிண்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, குர்னால் பாண்டியா, ராகுல் சாஹர், நேதன் குல்ட்டர் நைல், டிரெண்ட் போல்ட், பும்ரா.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
டெல்லி கேப்பிட்டல்ஸ்: ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(கேப்டன்), ஷிம்ரான் ஹெட்மையர், லலித் யாதவ், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ககிசோ ரபாடா, ஆன்ரிச் நோர்ட்ஜே, ஆவேஷ் கான்.