முதல் போட்டியில் மிட்செல் மார்ஷ் பந்துவீச மாட்டார் - ஆண்ட்ரூ மெக்டொனால்ட்!

Updated: Fri, May 31 2024 22:09 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தில் ஐசிசியின் ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளை மறுநாள் முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் தொடங்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்க உள்ளதால் எந்த அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்செல்லும் என்ற எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மறுபக்கம் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் பயிற்சி ஆட்டங்களிலும் பங்கேற்று வருகிறது. 

அந்தவகையில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியானது நமீபியா அணிக்கு எதிரான தங்களது முதலாவது பயிற்சி ஆட்டத்தில் 7விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்திருந்த நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸுடம் தோல்வியைத் தழுவியுள்ளது. இதனையடுத்து அந்த அணி தங்களது முதல் லீக் போட்டியில் ஓமன் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. 

இந்நிலையில் காயம் காரணமாக ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் ஒரு பேட்டராக மட்டுமே விளையாடுவார் அந்த அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “மிட்செல் மார்ஷை பொறுத்தவரை, அவரது உடற்தகுதியானது மேம்பட்டுள்ளது. மேலும் அவர் நேற்றிரவு அதிக பந்துகளை எதிர்கொண்டு விளையாடினார்.

அதுமட்டுமின்றி ஃபீல்டிங்கிலும் அவர் முன்னேற்றம் கண்டுள்ளார். இதனால் அவர் முதல் ஆட்டத்திற்குத் தயாராகிவிட்டார் போல் தெரிகிறது. ஆனால் அதேசமயம் அவரது பந்துவீச்சு குறித்து ஒருசில பிரச்சனைகள் உள்ளது. அதிலும் அவர் அதிகமாக உழைத்து வருகிறார். இதனால் தொடரின் முதல் போட்டியில் அவர் பந்துவீச மாட்டார். அதேசமயம் தொடரின் இரண்டாவது பகுதியில் நிச்சவர் அவர் தன்னை தயார் படுத்திக்கொள்வார்” என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வந்த மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக தொடரின் பாதியிலேயே விலகியதுடன் மேற்சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவிற்கு திரும்பினார். அதன்பின் ஆஸ்திரேலிய அணி மருத்துவர்களுடன் இணைந்து தனது உடற்தகுதியை மேம்படுத்தியதுடன், டி20 உலகக்கோப்பை தொடரிலும் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆஸ்திரேலிய அணி: மிட்செல் மார்ஷ் (கே), ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா.

ரிஸர்வ் வீரர்கள் - ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், மேத்யூ ஷார்ட்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை