ஸ்டார்க் அபார பந்துவீச்சு: பாகிஸ்தானை 148 ரன்களுக்குச் சுருட்டிய ஆஸ்திரேலியா

Updated: Mon, Mar 14 2022 21:58 IST
Mitchell Starc Spits Fire On A Dead Karachi Pitch (Image Source: Google)

கராச்சியில் பாகிஸ்தான் - அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் நடைபெற்று வருகிறது. 3ஆம் நாளான இன்று முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 557 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலியா. 

இதில் அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 160, ஸ்டீவ் ஸ்மித் 72, அலெக்ஸ் கேரி 93 ரன்கள் எடுத்தார்கள். பேட் கம்மின்ஸ் 34, ஸ்வெப்சன் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். ஆசியாவில் ஆஸ்திரேலிய அணியின் 6ஆவது பெரிய ஸ்கோர் இது. 

இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி பேட்டர்கள், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினார்கள். ஒருவராலும் 40 ரன்னைத் தொட முடியாமல் போனது. 

கேப்டன் பாபர் அஸாம் அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி கடைசி விக்கெட்டுக்கு 30 ரன்கள் சேர்த்தது. ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும் மிட்செல் ஸ்வெப்சன் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

408 ரன்கள் முன்னிலை பெற்று பாகிஸ்தானை ஃபாலோ ஆன் செய்த ஆஸ்திரேலிய அணி, 2ஆவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய முன்வந்தது. 8 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை