ஓய்வை அறிவிக்கிறாரா மிதாலி ராஜ்?

Updated: Mon, Mar 28 2022 14:29 IST
Image Source: Google

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது. அரை இறுதி போட்டிக்குள் நுழைய வேண்டும் எனில் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெறுவது அவசியம் என்ற கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியது. 

ஆனால் வெற்றிக்காக கடைசி வரை போராடிய இந்திய அணி தோல்வியை தழுவியதுடன், அரையிறுதி செல்லும் வாய்ப்பையும் இழந்தது.

இந்த நிலையில், போட்டி முடிந்த பின்னர் இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலிராஜ், போட்டியளித்தார். அப்போது ஓய்வு முடிவு குறித்து அவரிடம் கேட்டபோது அவர் கூறுகையில், ''நாங்கள் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுவோம் என்று நினைத்தோம். ஆனால் எதிர்பாராதவிதமாக அது நடக்கவில்லை. அரையிறுதிக்கு தகுதிபெற முடியாமல் போனது எங்களுக்கு மிகப்பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. உண்மையில் என்ன நடந்தது என்பதை உணரவும், எனது எதிர்காலத்தை பற்றி சிந்திக்கவும் நீங்கள் எனக்கு சிறிது நேரம் தேவை. எனது ஓய்வு முடிவு குறித்து அறிவிக்க இது சரியான நேரமாக இருக்காது.

எதிர்காலத்தைப் பற்றி நான் அதிகம் திட்டமிடவில்லை. நிறைய உணர்ச்சிகளுடன் நிற்கிறோம். ஒரு வருடத்திற்கு மேலாக உலகக்கோப்பை போட்டிக்காக கடினமாக தயாராகி வந்தோம். ஒவ்வொரு வீரருக்கும் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதை வீராங்கனைகள் ஏற்றுக்கொண்டு இங்கிருந்து செல்லலாம்" என்று அவர் கூறினார்

மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்ற ஜூலன் கோஸ்வாமி இந்த போட்டியில் காயம் காரணமாக விளையாடவில்லை. இதுகுறித்து மிதாலிராஜ் கூறுகையில், ''இந்திய அணியின் கடைசி ஆட்டத்தில் ஜூலன் கோஸ்வாமி விளையாடதது எங்களுக்கு பெரும் இழப்பும் ஏமாற்றமும் தான்'' என்றார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை