இந்தியா - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியானது சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் இந்திய மகளிர் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தியதுடன் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது. 

Advertisement

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மகளிர் ஒருநாள் வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் நிலையில், முத்தரப்பு ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஸ்மிருதி மந்தனா ஒரு இடம் முன்னேறி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேசமயம் இங்கிலாந்தின் நாட் ஸ்கைவர் பிரண்ட் ஒரு இடம் பின் தங்கி மூன்றாம் இடத்தில் உள்ளார். 

Advertisement

இதுதவிர்த்து முத்தரப்பு தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சமாரி அத்தபத்து 2 இடங்கள் முன்னேறி 7ஆம் இடத்தையும், இந்திய அணியின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 5 இடங்கள் முன்னேறி 15ஆம் இடத்தையும், தென் ஆப்பிரிக்காவின் சோலே ட்ரையான் 9 இடங்கள் முன்னேறி 18ஆம் இடத்தையும், இந்திய அணியின் தீப்தி சர்மா 13 இடங்கள் முன்னேறி 32ஆம் இடத்தையும், தென் ஆப்பிரிக்காவின் தஸ்மின் பிரிட்ஸ் 8 இடங்கள் முன்னேறி 32ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். 

அதேசமயம் மகளிர் ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் எந்த மாற்றமும் இல்லை. இங்கிலாந்து அணியின் சோஃபி எக்லெஸ்டோன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் மற்றும் மேகன் ஷட் ஆகியோர் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களிலும், இந்திய அணியின் தீப்தி சர்மா 4ஆம் இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் மரிஸான் கேப் 5ஆம் இடத்திலும் தொடர்கின்றனர். 

Also Read: LIVE Cricket Score

மேற்கொண்டு நடந்து முடிந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்காவின் நதின் டி கிளார்க் 24ஆம் இடத்திற்கும், இந்திய அணியின் ஸ்நே ரானா 34ஆம் இடத்திற்கும், இலங்கை அணியின் சுகந்திகா குமாரி 37ஆம் இடத்திற்கும், தென் ஆப்பிரிக்காவின் மசபடா கிளாஸ் 41ஆவது இடத்திற்கும், சோலே ட்ரையான் 50ஆம் இடத்திற்கும், இலங்கையின் தேவ்மி விஹங்கா 79ஆவது இடத்திற்கும் முன்னேறிவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News