சர்வதேச மகளிர் கிரிக்கெட்டை ஆளும் மிதாலி ராஜ்!
இங்கிலாந்து - இந்திய மகளிர் அணிக்களுக்கு இடையேயான 3வது ஒரு நாள் போட்டி வொர்செஸ்டரில் நேற்று நடந்தது. இப்போட்டியில் மிதாலி ராஜ் அதிரடியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியது.
மேலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மிதாலி ராஜ் 75 ரன்களை சேர்த்தார். மேலும் சர்வதேச ஒருநாள் போட்டியில் 10 ஆயிரத்து 273 ரன்களை கடந்தும் அசத்தினார்.
இதன் மூலம், மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களை விளாசியவர் என்ற இங்கிலாந்து முன்னாள் வீராங்கனையான சார்லோட் எட்வார்ட்சின் சாதனையை முறியடித்து, மிதாலி ராஜ் இப்போது சர்வதேச மகளிர் ஒருநாள் போட்டியில் அதிக ரன்களை எடுத்தவர் எனும் சாதனையை படைத்தார்.
கடந்த மார்ச்சில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய அணியின் கேப்டனான மிதாலிராஜ் சர்வதேச போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.