சர்வதேச கிரிக்கெட்டில் இமாலய சாதனையை நிகழ்த்திய மிதாலி ராஜ்!
இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி, 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இருப்பினும் இப்போட்டியில் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் மெகா சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதாவது, மிதாலி ராஜ் ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக தனது ஐந்தாவது அரைசதத்தை அடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி, சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களை அவர் பூர்த்தி செய்திருக்கிறார்.
ஆண்கள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் எப்படியோ, அதுபோல மகளிர் கிரிக்கெட்டில் மிதாலி ராஜ். கடந்த 22 ஆண்டுகளாக இவரது பெயர் மட்டுமே இந்திய பெண்கள் கிரிக்கெட்டில் தொடர்ந்து உச்சரிக்கப்பட்டு வருகிறது. 22 ஆண்டுகளாக தனது தோளில் இந்திய பெண்கள் அணியை சுமந்து வரும் மிகச் சில கிரிக்கெட் வீராங்கனைகளில் முக்கியமானவர் மிதாலி ராஜ் தான்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
மகளிர் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் அடித்த வீராங்கனை என்ற மிகப்பெரும் உலக சாதனையும் மிதாலி ராஜ் வசம் தான் இருக்கிறது. இந்நிலையில், ஒட்டுமொத்தமாக மிதாலி தற்போது 20,000 ரன்களை கடந்திருக்கிறார் புதிய மைல் கல்லை எட்டியுள்ளார்.