சர்வதேச கிரிக்கெட்டில் மிதாலி ராஜ் சாதனை!
ஐசிசி மகளிர் உலகக்கோப்பை தொடரின் 12ஆவது சீசன் நியூசிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 245 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் பங்கேற்றதன்மூலம் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
அச்சாதனையானது அதிக உலகக்கோப்பை தொடரில் விளையாடிய முதல் வீராங்கனை என்பது தான். மேலும் மூன்றாவது கிரிக்கெட்டர் என்பது கூடுதல் சிறப்பு.
இதற்கு முன் இந்திய வீரர் சாச்சின் டெண்டுல்கர், பாகிஸ்தனின் ஜாவேத் மியான்டத் ஆகியோர் தலா 6 உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்றுள்ளனர். அந்தவரிசையில் தற்போது மிதாலி ராஜ் இணைந்துள்ளார்.