எம்எல்சி 2023: டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டூ பிளெசிஸ் நியமனம்! 

Updated: Fri, Jun 16 2023 22:14 IST
MLC 2023: Faf du Plessis named captain of Texas Super Kings (Image Source: Google)

கிரிக்கெட் போட்டிகளை உலகெங்கும் பரப்பும் நோக்கில் ஐசிசி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு உதவிகரமாக இருப்பது டி20 போன்ற விறுவிறுப்பான போட்டிகள் தான். ஆகையால் பல்வேறு நாடுகளில் டி20 லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியன் பிரிமியர் லீக் எனும் டி20 கிரிக்கெட் தொடர் வருடாவருடம் நடத்தப்பட்டு வருகிறது. 

ஆஸ்திரேலியாலில் பிக் பாஸ் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலும் கடந்த சில வருடங்களாக டி20 லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் டி20 லீக் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. அதன்பிறகு அமெரிக்காவிலும் கிரிக்கெட்டை பரப்புவதற்கு அமெரிக்க கிரிக்கெட் சங்கம் முடிவு செய்திருந்தது. 

அதற்கு உதவிகரமாக இருந்தது டி20 லீக் கிரிக்கெட் வடிவம்தான். ஆகையால் அமெரிக்காவிலும் தொடரை நடத்துவதற்கு அமெரிக்க கிரிக்கெட் சங்கம் முடிவு செய்து அதற்கான அறிவிப்பு வெளியிட்டது. இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் அணிகளை வைத்துள்ள பல்வேறு நிர்வாகங்கள் அமெரிக்க லீகிலும் அணிகளை வாங்கினர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெக்சாஸ் மாகாணத்தின் அணியை வாங்கி அதற்கு டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் என பெயரிட்டுள்ளது

டெக்சாஸ் அணிக்கு அம்பத்தி ராயுடு, டேவிட் மில்லர், பிராவோ, டெவான் கான்வே, மிச்சல் சான்ட்னர், டேனியல் சாம்ஸ் உள்ளிட்ட சில வெளிநாட்டு வீரர்களை எடுத்திருக்கிறது. இந்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு நட்சத்திர வீரர் ஃபாஃப் டு பிளசிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி பல்வேறு வெற்றிகளை பெற்றுக்கொடுத்த ஃபாஃப் டூ பிளெசிஸ் தற்போது கடந்த இரு சீசன்களாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா டி20 லீகில் ஜெகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் எனும் அணியை வைத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஃபாஃப் டு பிளசிஸ் கேப்டனாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை