பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பலவீனமாக உள்ளது - முகமது கைஃப்!

Updated: Mon, Jun 03 2024 21:16 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஏனெனில் மொத்தம் 20 அணிகள் இத்தொடரில் பங்கேற்கவுள்ளதால் இதில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இத்தொடருக்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகியும் வருகின்றன.

அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரை எதிர்கொண்டுள்ள பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. ஏனெனில் கடந்தாண்டு இறுதிப்போட்டிவரை முன்னேறிய பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இதனால் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் இத்தொடரை எதிர்கொண்டுள்ளது. 

இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் முகமது கைஃப், பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பலவீனமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “பாகிஸ்தான் அணியின் பேட்டிங் மிகவும் பலவீனமாக இருக்கிறது. ஃபகர் ஸமான் மட்டுமே கொஞ்சம் அதிரடியாக விளையாட முயற்சிக்கிறார். இறுதிக்கட்டத்தில் இஃப்திகார் அஹ்மது கொஞ்சம் வேகமாக விளையாடுகிறார். மற்ற பேட்டர்கள் அனைவரும் 125 ஸ்ட்ரைக் ரேட்டில் தான் விளையாடுகிறார்கள்.

அவர்களின் பேட்டிங் எந்த வகையிலும் பயமாக இல்லை. ஆனால் பந்துவீச்சைப் பொறுத்தவரை சிறப்பான அணியாகவே தோன்றுகிறது. அவர்களிடம் ஷாஹீன் அஃப்ரிடி மற்றும் நசீம் ஷா ஆகியோர் இருக்கிறார்கள். நசீம் ஷா இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை தொடரை காயத்தால் தவறவிட்டார். தற்சமயம் அவர் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளது அணிக்கு கூடுதல் பலத்தை வழங்கியுள்ளது. அவர்களுடன் முகமது அமீரும் தற்போது உள்ளார்.  பகிஸ்தான் எந்த பார்மில் வந்தாலும் கவலை இல்லை.

பாகிஸ்தான் அணியின் வரலாறு எங்களுக்கு தெரியும். அவர்கள் திடீரென்று ஏதாவது செய்வார்கள். கடந்த முறை கூட அவர்கள் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வந்தார்கள். மேலும் நியூயார்க் மைதானம் திறந்தபடி இருக்கின்ற காரணத்தினாலும், ஆடுகளம் ஆஸ்திரேலியாவில் உள்ளது போல பவுன்ஸ் கொண்டதாக இருக்கும் என்பதால் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீச வாய்ப்புள்ளது. 

ஆனால் தேசமயம் இந்திய அணியில் ஜஸ்ப்ரித் பும்ரா சிறப்பான ஃபார்மில் உள்ளார். கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், இம்முறை அவர் இருப்பது நிச்சயம் இந்திய அணிக்கு சாதகத்தைக் கொடுத்துள்ளது. அவருடன் குல்தீப் யாதவும் சமீப காலமாக அபாரமான ஃபார்மில் உள்ளார். இருவரும் விக்கெட்டுகளை கைப்பற்றும் பந்துவீச்சாளர்களாக இருப்பது அணிக்கு கூடுதல் பலமாக பர்க்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை