பாகிஸ்தான் டி20 அணியின் துணைக்கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமனம்!

Updated: Mon, Jan 08 2024 22:28 IST
பாகிஸ்தான் டி20 அணியின் துணைக்கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமனம்! (Image Source: Google)

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் தொடரை முழுவதுமாக இழந்தது. இந்த தொடர் முடிவடைந்த நிலையில் பாகிஸ்தான் அணி அடுத்து நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி விளையாட உள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் கேப்டன் மற்றும் 17 பேர் கொண்ட அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் விலகி நிலையில் புதிய கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில் அணியின் துணை கேப்டனாக நட்சத்திர வீரர் முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக பாகிஸ்தான் அணியின் துணைக்கேப்டனாக இருந்த ஷதாப் கான் அணியிலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்ட நிலையில், முகமது ரிஸ்வானுக்கு அப்பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி ஜனவரி 12ஆம் தேதி நடக்கிறது.

பாகிஸ்தான் அணி: ஷாஹீன் ஷா அஃப்ரிடி (கேப்டன்), முகமது ரிஸ்வான் (துணை கேப்டன்), அமீர் ஜமால், அப்பாஸ் அஃப்ரிடி, அப்ரார் அகமது, அசம் கான், பாபர் அசாம், ஃபகார் ஜமான், ஹாரிஸ் ரவுஃப், ஹசீபுல்லா கான், இஃப்திகார் அகமது, முகமது நவாஸ், முகமது வாசிம், சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், உசாமா மிர், ஸமான் கான்.
 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை