திட்டமிட்டபடி ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெறும் - மைக்கேல் வாகன்
கிரிக்கெட் உலகில் பெருவாரியான ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ள தொடர்களில் முதன்மையானது ஆஷஸ் தொடர். ஐசிசி நடத்துகின்ற தொடர்களுக்கு அடுத்ததாக ஆஷஸ் தொடர் இந்த வரிசையில் இருக்கும். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மட்டுமே இந்த தொடரில் பங்கேற்று விளையாடும். அதுவும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் தான்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் தொடர் என்பதால் இதற்கு கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது. அதன்படி 2021-22 க்கான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் டிசம்பர் 8 முதல் ஜனவரி 18 நடைபெற உள்ளது. மொத்தம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த தொடரில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் திட்டமிட்டபடி ஆஷஸ் தொடர் நடைபெறுமென அந்த அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வாகனின் ட்விட்டர் பதிவில், “ஆஷஸ் தொடர் திட்டமிட்டபடி நடக்கும். ஆனால் பல வீரர்கள் இத்தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்” என்று பதிவு செய்துள்ளார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
முன்னதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், வீரர்களின் ஆலோசனையை கேட்டு அதன்பின் ஆஷஸ் தொடருக்கான வேலையை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.