'தோனி கொடுத்த அந்த ஒரு அட்வைஸ் எனக்கு பெரிய உதவியாக இருந்தது' - நெகிழ்ச்சியில் நடராஜன் 

Updated: Wed, Apr 07 2021 12:47 IST
Image Source: Google

இந்திய அணியின் வளர்ந்துவரும் வேகப்பந்து வீச்சாளர் யார்க்கர் நாயகன் நடராஜன். கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய நடராஜன் தனது அபாரமான யார்க்கர் பந்திவீச்சாள் எதிரணி பேட்ஸ்மேன்களை கதிகலங்கச் செய்தார். 

அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் தோனியின் விக்கெட்டைக் கைப்பற்றியும் அசத்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பு நடராஜனுக்கு கிடைத்தது. அத்தொடரிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நடராஜன் தற்போது இந்திய அணியின் துருப்புச் சீட்டாகவும் விளங்குகிறார். 

இந்நிலையில், நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கு தயாராகின் வரும் நடராஜன் தோனி கூறிய அட்வைஸ் தான் எனக்கு பெரும் உதவியாக இருந்ததேன தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், தோனி போன்ற மிகச்சிறந்த பேட்ஸ்மேனிடம் பேசுவது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். அதிலும் நான் அவரது விக்கெட்டைக் கைப்பற்றியது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அப்போட்டியின் பிறகு தோனியிடன் நான் பேசும் வாய்ப்பும் கிடைத்தது. 

அப்போது அவர் என்னிடம் எனது பந்துவீச்சில் ஸ்லோ பவுன்சர், கட்டர்ஸ் ஆகியவற்றை வீசுவதற்கு ஆலோசனைகளை வழங்கினார். அவர் கூறிய அலோசனை படி நான் தற்போது வரை எனது பந்துவீச்சில் மாற்றங்களைச் செய்துவருகிறேன் என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை