எம் எஸ் தோனியை கடவுள் போல் பார்க்கின்றனர் - கேமரூன் க்ரீன்!

Updated: Fri, Sep 08 2023 23:03 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னணி இளம் ஆல்ரவுண்டான கேமரூன் கிரீன். ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த 2020ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 24 டெஸ்ட் போட்டிகள், 16 ஒருநாள் போட்டிகள் மற்றும் 8 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். வேகப்பந்து வீச்சாளராகவும், அதிரடி பேட்ஸ்மேனாகவும் அசத்தும் இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் விளையாடியிருந்தார். 

அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட அவர் ஐபிஎல் தொடரிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதன்படி 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 16 போட்டியில் பங்கேற்று 50 ரன்கள் சராசரியுடன் 452 ரன்கள் குவித்திருந்தார். அதில் ஒரு சதமும் இரண்டு அரை சதங்களும் அடித்து ஆச்சரியப்படுத்தி இருந்தார். அதோடு ஐபிஎல் தொடரில் 40 பவுண்டரிகளை விளாசிய அவர் 22 சிக்ஸர்களையும் பறக்க விட்டு அசத்தியிருந்தார்.

சர்வதேச கிரிக்கெட்டை காட்டிலும் ஐபிஎல் தொடரில் அவரது இந்த அசத்தலான செயல்பாடு ஆஸ்திரேலிய அணிலும் அவரது இடத்தினை நிரந்தரப்படுத்தியது. 24 வயதான கேமரூன் கிரீன் தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஒருநாள் தொடரிலும் பங்கேற்று விளையாடி வரும் வேளையில் ஐபிஎல் தொடரில் விளையாடிய போது தான் சந்தித்த நிகழ்ச்சியான சில தருணங்கள் குறித்து வெளிப்படையான கருத்துக்களை பகிர்ந்து உள்ளார்.

இதுகுற்த்து பேசிய அவர், “ஐபிஎல் தொடரின் போது இந்திய ரசிகர்கள் மகேந்திர சிங் தோனியை கடவுள் போல் பார்ப்பதை நான் நேரில் கண்டு நெகிழ்ச்சி அடைந்துள்ளேன். அதிலும் குறிப்பாக சென்னையில் அவர் விளையாடும் போது தமிழக ரசிகர்கள் அவரை வரவேற்கும் விதம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் தோனி இந்தியா முழுவதும் எங்கு சென்றாலும் அவருக்கான வரவேற்பினை பார்க்க முடிந்தது. 

அதிலும் குறிப்பாக சென்னை மைதானத்தில் அவர் பேட்டிங் செய்ய களமிறங்கி வரும்போது ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு என்பதை அங்கிருந்து நான் பார்த்து ரசித்துள்ளேன். அதோடு சேப்பாக்கத்தில் அவர் விளையாடும் போது நான் மைதானத்தில் இருந்ததையும் பெருமையாக நினைக்கிறேன். மகேந்திர சிங் தோனியை ரசிகர்கள் கடவுள் போன்று பார்க்கிறார்கள். சென்னை மைதானத்தில் அவர் பேட்டிங் செய்ய களமிறங்கி வரும் போது ரசிகர்கள் கொடுக்கும் அந்த வரவேற்பை நான் நேரில் பார்த்ததே அதற்கு சாட்சி அந்த அளவிற்கு அவர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளார். இன்றளவும் அவர் மைதானத்தில் அமைதியான குணங்களால் ரசிகர்களை ஈர்த்துள்ளார்” என கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை