ஐபிஎல் ஓய்வு எப்போது? தோனியின் கூலான பதில்!
புனேவில் நடைபெறும் 46வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே, ஹைதராபாத் அணி களமிறங்கியது. இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்ற 8 ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த அணிகள் 5 முறை வென்றுள்ளது. 2வது பேட் செய்த அணிகள் 3 முறை வென்றுள்ளது.
இந்த நிலையில், தோனி டாஸ்க்கு வந்ததும் ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அப்போது கிரிக்கெட் வர்ணனையாளர் மாரிசன் உங்களை கேப்டனாக பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். இதில் டாஸை தோனி இழந்தாலும், வில்லியம்சன் பந்துவீசுவதாக அறிவித்தார். அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்று தெரிவித்த அவர், கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வி தங்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று கூறினார்.
இதனையடுத்து பேசிய கேப்டன் தோனியிடம், ஐபிஎல் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு நிச்சயமாக அடுத்த ஆண்டும் விளையாடுவேன். ஆனால இதே மஞ்சள் ஜெர்சியாக இல்லை வேறு மஞ்சள் ஜெர்சிக்காகவா என்று என்னால் சொல்ல முடியாது என்றார். இன்றைய போட்டியில் பிராவோ, துபே ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தோனி குறிப்பிட்டார்.
அதற்கு பதிலாக, சிம்ரஜித் சிங் மற்றும் டிவோன் கான்வே அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தோனி குறிப்பிட்டார். அணியில் நாங்கள் சில தவறு செய்கிறோம். கேட்ச்களை நாங்கள் கோட்டை விடுகிறோம். அதன் மீது நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.
அதே போல் பந்துவீச்சில் ஒரே ஓவரில் அதிக ரன்களை கொடுத்து விடுகிறோம். என்னை பொறுத்தவரை ஒரு ஓவரில் அதிகபட்சமாக 18 ரன்கள் வரை தரலாம். ஆனால் 24, 25 ரன்கள் என்ற அளவுக்கு தரக் கூடாது. இது போன்ற சிறிய வித்தியாசம் தான் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும். இதில் எல்லாம் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம் என்று தோனி குறிப்பிட்டார்.