முல்தான் சுல்தான்ஸ் vs லாகூர் கலந்தர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Mon, Feb 13 2023 13:59 IST
Multan Sultans vs Lahore Qalandars, PSL 8 1st Match – MUL vs LAH Cricket Match Preview, Prediction, (Image Source: Google)

பாகிஸ்தானின் உள்ளூர் டி20 லீக் தொடரான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 8ஆவது சீசன் இன்று தொடங்குகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி, லாகூர் கலந்தர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

கடந்த சீசனில் இவ்விரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதில் முல்தான் சுல்தான்ஸ் அணியை வீழ்த்தி லாகூர் கலந்தர்ஸ் அணி கோப்பையைத் தட்டிச்சென்றது. இதனால் அத்தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முல்தான் சுல்தான்ஸ் இப்போட்டியில் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - முல்தான் சுல்தான்ஸ் vs லாகூர் கலந்தர்ஸ்
  • இடம் - முல்தான் கிரிக்கெட் மைதானம், முல்தான்
  • நேரம் - இரவு 8 மணி

போட்டி முன்னோட்டம்

ஷாஹின் அஃப்ரிடி தலைமையிலான லாகூர் கலந்தர்ஸ் அணி பேட்டிங் பந்துவீச்சு என இரு தரப்பிலும் வலுவான வீரர்களைக் கொண்டுள்ளது. அதன்படி பேட்டிங்கில் ஃபகர் ஸமான், ஹாரி ப்ரூக், அப்துல்லா ஷஃபிக் , சிக்கந்தர் ரஸா, ஜோர்டன் காக்ஸ் ஆகியோர் உள்ளனர்.

பந்துவீச்சில் ஷாஹின் அஃப்ரிடி, ரஷித் கான், ஹாரிஸ் ராவூஃப், ஹுசைன் தாலத் ஆகியோர் இருப்பது எதிரணி பேட்டர்களுக்கு பெரும் சவாலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் முகமது ரிஸ்வான் தலைமையிலான் முல்தான் சுல்தான்ஸ் அணியையும் குறைத்து எடைபோட முடியாது. ஏனெனில் ஷான் மசூத், ரைலி ரூஸோவ், டேவிட் மில்லர், டிம் டேவிட் என டி20 ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்களை கொண்டுள்ளது.

பந்துவீச்சிலும் ஆதில் ரஷித், அகீல் ஹொசைன், ஜோஷூவா லிட்டில், உஸாமா மிர், குஷ்டில் ஷா, ஷாநவாஸ் தாஹானி, உஸ்மா கான் என நட்சத்திர பந்துவீச்சாளர்கள் இருப்பதால் அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.

உத்தேச லெவன்

முல்தான் சுல்தான்ஸ் – டேவிட் மில்லர், ஷான் மசூத், குஷ்தில் ஷா, உஸ்மான் கான், அராபத் மின்ஹாஸ், கீரன் பொல்லார்ட், முகமது ரிஸ்வான்(c), உசாமா மிர், ஜோஷுவா லிட்டில், அகீல் ஹொசைன், ஷாநவாஸ் தஹானி

லாகூர் கலாந்தர்ஸ் - ஃபகார் ஸமான், ஹுசைன் தலாத், கம்ரான் குலாம், அப்துல்லா ஷஃபீக், லியாம் டௌச, சிக்கந்தர் ராஸா, ஷேன் டாட்ஸ்வெல், சாம் பில்லிங்ஸ், ஷஹீன் அப்ரிடி (கே), ஹாரிஸ் ரவுஃப், ஜமான் கான்.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - முகமது ரிஸ்வான்
  • பேட்டர்ஸ் - ரைலீ ரூஸோவ், ஷான் மசூத், ஃபகார் ஸமான்
  • ஆல்-ரவுண்டர்கள் - டேவிட் வைஸ், சிக்கந்தர் ராசா, குஷ்தில் ஷா
  • பந்துவீச்சாளர்கள் - அகீல் ஹொசைன், ஜோஷுவா லிட்டில், ஷஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை