ஐபிஎல் 2022: சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Thu, Apr 21 2022 11:49 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நடப்பு சீசனில் நேருக்கு நேர் மோதவுள்ளன. 

நடப்பு தொடரில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை நடைபெற்றுள்ள 6 போட்டிகளில் வெறும் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதே வேளையில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியோ, பங்கேற்ற 6 போட்டிகளிலும் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. 

மும்பை அணி இன்றைய ஆட்டத்தில் தோற்றால் தொடரிலிருந்து வெளியேறிவிடும், சென்னை அணி தோற்றால் இனி நடைபெறும் அனைத்து போட்டிகளுமே வாழ்வா சாவா என்ற நிலை தான்.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
  • இடம் - டிஒய் பாட்டில் மைதானம், மும்பை
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

சென்னை அணியில் ருத்துராஜ் கெய்க்வாட்  ‘ஃ பார்மிற்கு’ திரும்பியிருப்பது கூடுதல் பலம். அவர் கடந்த போட்டியை போன்று இந்த ஆட்டத்திலும் கைகொடுப்பார் என நம்பலாம். உத்தப்பா, அம்பதி ராயுடு, மொயீன் அலீ ஆகியோர் பழைய ஃபார்ம்க்கு வந்தால் மட்டுமே சிஎஸ்கே தப்பிக்க முடியும். அதிக ரன் எடுத்த சென்னை அணி வீரர்களில் முதலிடத்தில் உள்ள ஷிவம் துபே சீரான பேட்டிங்கை தர வேண்டும். 

தோனி, ஜடேஜா இருவரும் ‘ஃபினிஷராக அணிக்கு வெற்றி பெற்றுத் தருவர் என நம்பலாம். சென்னை அணிக்கு விக்கெட்டை வீழ்த்தும் வேகப்பந்துவீச்சாளர் என்று யாரும் இல்லை. பவுலிங்கில் டுவைன் பிராவோ, தீக்சனா மட்டும் ஆறுதல் தருகின்றனர்.

மும்பை அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, இஷான் கிஷான் ஆகியோரின் ஃபார்ம் கவலை தருகிறது. இவர்கள் மீண்டால் அந்த அணியின் பாதி பிரச்சினை முடிந்துவிடும். சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, பிரெவிஸ், பொலார்ட் இணைந்து அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும். 

அதேசமயம் அணியில் பும்ராவை தவிர வேறு எந்த வேகப்பந்துவீச்சாளரும் அணியை காப்பாற்றவில்லை. மும்பை அணியில் ஒட்டுமொத்த வீரர்களும் எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இரு அணிகள் இடையேயான இந்த ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பதால், இந்த போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

நேருக்கு நேர் 

  • மோதிய போட்டிகள் - 34
  • சிஎஸ்கே வெற்றி - 14
  • மும்பை வெற்றி -20

உத்தேச அணி

மும்பை இந்தியன்ஸ் - ரோஹித் சர்மா (கே), இஷான் கிஷன், டெவால்ட் ப்ரீவிஸ், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், கீரன் பொல்லார்ட், ஃபேபியன் ஆலன், ஜெய்தேவ் உனட்கட், முருகன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, டைமல் மில்ஸ்.

சென்னை சூப்பர் கிங்ஸ் - ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, அம்பதி ராயுடு, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா (கே), எம்.எஸ். தோனி, டுவைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான்/ டுவைன் பிரிட்டோரியஸ், மகேஷ் தீக்ஷனா, முகேஷ் சவுத்ரி.
 
ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - இஷான் கிஷன்
  • பேட்டர்ஸ் - சிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், டெவால்ட் ப்ரீவிஸ், திலக் வர்மா
  • ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா
  • பந்துவீச்சாளர்கள் - மகேஷ் தீக்ஷனா, டுவைன் பிராவோ, ஜெய்தேவ் உனட்கட், ஜஸ்பிரித் பும்ரா.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை