Csk vs mi
சிஎஸ்கேவில் அனைவருக்கும் ஒரே மாதிரியான மரியாதை தான்- ருதுராஜ் கெய்க்வாட்!
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய, பலரும் எதிர்பார்த்த போட்டி ஒரு தலைப்பட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பக்கம் முடிந்திருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி தட்டுத்தடுமாறி 139 ரன்கள் அடித்தது. இந்த இலக்கை சேஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் ஆட்டத்தை முடித்தது.
போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 16 பந்துகளில் 30 ரன்கள் அடித்து மிகச்சிறப்பான துவக்கம் அமைத்துக் கொடுத்த ருத்துராஜ் கெய்க்வாட், போட்டி முடிந்த பிறகு அணியில் நடக்கும் பல்வேறு விஷயங்கள் பற்றி பகிர்ந்து கொண்டார். அப்போது தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தில் வீரர்களை எப்படி ட்ரீட் செய்கிறார்கள்? என்பது பற்றி பேசினார்.