ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Tue, May 17 2022 11:27 IST
Mumbai Indians vs Sunrisers Hyderabad, IPL 2022 – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probab (Image Source: Google)

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7:30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் 65ஆவது லீக் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன்  தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹை    தராபாத் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ்
  • இடம் - வான்கடே மைதானம், மும்பை
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

ஹைதராபாத் அணி இந்த சீசனில் இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 5 வெற்றி, 7 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று 8ஆம் இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து அந்த அணி தடுமாறி வருகிறது. இன்று நடைபெறும் ஆட்டத்திலும் தோற்றால் ஐதராபாத்  அணி பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துவிடும். எனவே அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி களமிறங்குகிறது.

பேட்டிங்கில் அபிஷேக் சர்மா (374 ரன்கள்), எய்டன் மார்க்ரம் (358 ரன்கள்), ராகுல் திரிபாதி (317 ரன்கள்) ஆகியோர் வலுசேர்க்கிறார்கள். பந்துவீச்சில் டி நடராஜன் (18 விக்கெட்டுகள்), உம்ரான் மாலிக் (18 விக்கெட்டுகள்) நம்பிக்கை அளிக்கின்றனர்.  

மறுபுறம், மும்பை அணி இந்த தொடரில் இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 3 வெற்றி, 9 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. ஏற்கனவே பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட மும்பை அணி இனிமேல் இழக்க எதுவும் இல்லை என்பதால் நெருக்கடியின்றி விளையாடக்கூடும். 

முந்தைய லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரமான வெற்றியை பதிவு செய்திருந்தது மும்பை. அந்த உத்வேகத்துடன் களமிறங்கும் மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை தவிர்க்க முயற்சிக்கக்கூடும்.

பேட்டிங்கில் திலக் வர்மா (368 ரன்கள்), இஷான் கிஷன் (327 ரன்கள்) சிறப்பான நிலையில் உள்ளனர். கேப்டன் ரோகித் சர்மாவிடமிருந்து அதிரடியான ஒரு ஆட்டத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, டேனியல் சாம்ஸ், முருகன் அஸ்வின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 18
  • மும்பை வெற்றி - 10
  • ஹைதராபாத் வெற்றி - 8

உத்தேச அணி 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் -கேன் வில்லியம்சன், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ஷஷாங்க் சிங், வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், டி நடராஜன்.

மும்பை இந்தியன்ஸ் - இஷான் கிஷன், ரோஹித் சர்மா, திலக் வர்மா, ராமன்தீப் சிங், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டிம் டேவிட், ரித்திக் ஷோக்கீன், டேனியல் சாம்ஸ், குமார் கார்த்திகேயா, ஜஸ்பிரித் பும்ரா, ரிலே மெரிடித்.

ஃபேண்டஸி  லெவன்

  • கீப்பர் - இஷான் கிஷன், நிக்கோலஸ் பூரன்
  • பேட்ஸ்மேன்கள் - திலக் வர்மா, அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ரோஹித் சர்மா
  • ஆல்-ரவுண்டர்கள் - ஐடன் மார்க்ரம், டேனியல் சாம்ஸ்
  • பந்துவீச்சாளர்கள் - ஜஸ்பிரிட் பும்ரா, உம்ரான் மாலிக், புவனேஷ்வர் குமார்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை