கோண்டாட்டத்தில் அடுத்து செய்வதை மறந்துவிடுவேன் - வருண் சக்ரவர்த்தி ஓபன் டாக்!

Updated: Tue, Sep 21 2021 14:22 IST
Image Source: Google

கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணி வீரர்கள் மோசமாக விளையாடித் தோற்றார்கள். இதனால் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை வீழ்த்தியது.

இப்போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய வருண் சக்ரவர்த்திக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. நான்கு ஓவர்கள் வீசிய வருண் சக்ரவர்த்தி 13 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதில் 15 பந்துகளை டாட் பந்துகளாகவும் வீசினார்.

இந்த வெற்றியினால் புள்ளிகள் பட்டியலில் 7ஆம் இடத்தில் இருந்த கொல்கத்தா, 5ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆர்சிபி அணி தொடர்ந்து 3ஆவது இடத்தில் உள்ளது. 

வருண் சக்ரவர்த்தி எப்போது விக்கெட் எடுத்தாலும் அதைப் பெரிதளவில் கொண்டாட்ட மாட்டார். நிதானமாக தனது அணி வீரர்களுடன் அத்தருணத்தின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வார். அவ்வளவுதான். 

இந்நிலையில் சக வீரர் ரஸ்ஸலுடனான உரையாடலில் இதற்கான காரணத்தை வருண் சக்ரவர்த்தி கூறிகையில், “விக்கெட் கிடைத்தவுடன் அதைக் கொண்டாடுவதால் என்னுடைய செயல்முறையிலிருந்து நான் விலகிவிடக்கூடாது. அதிகமாகக் கொண்டாடினால் அடுத்த பந்தில் என்ன செய்யவேண்டும் என்பதை மறந்து விடுவேன். எனவே தான் அதிகமாகக் கொண்டாட மாட்டேன். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

எனினும் பிறகு கொண்டாடி விடுவேன். சென்னை போன்ற சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளம் எனக்குப் பொருந்தாது. பேட்டிங்குக்குச் சாதகமான தட்டையான ஆடுகளமே எனக்குச் சரியாக இருக்கும். அபுதாபி மைதானத்தை மிகவும் விரும்ப ஆரம்பித்துவிட்டேன். தட்டையான ஆடுகளம் எனக்குப் பொருத்தமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை