எனது இடத்தில் வில்லியம்சன்னை ஆதரியுங்கள் - வார்னர் வேண்டுகோள்!
சன் ரைசர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான டேவிட் வார்னரின் தலைமையில் ஏற்கனவே சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்று இருந்தது. அதனை தொடர்ந்தும் கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் தொடர்ச்சியாக சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அவரை கடந்த தொடரின் பாதியிலேயே சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பதவியில் இருந்து அவரை நிர்வாகம் நீக்கியது.
அதனைத்தொடர்ந்து விளையாடும் பிளேயிங் லெவனிலும் அவருக்கு இடமளிக்காத சன்ரைசர்ஸ் அணி அவருக்கு பதிலாக ஜேசன் ராய்-க்கு வாய்ப்பளித்தது. இதனால் வெளியில் அமர்ந்து இருந்த டேவிட் வார்னர் அணிக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் நிச்சயம் அவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாட மாட்டார் என்று கூறப்பட்டது. மேலும் ஐபிஎல் தொடரை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது மட்டுமின்றி தொடர்நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
இதனால் அடுத்த ஆண்டு அவர் எந்த அணிக்காக விளையாட போகிறார் ? என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்நிலையில் தான் நிச்சயம் சன்ரைசர்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்படமாட்டேன் என்றும் தனக்கு பதிலாக வில்லியம்சனை ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் ரசிகர்களிடம் உருக்கமான வேண்டுகோள் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
அதன்படி இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்கள் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அவர், “என்னுடைய இடத்தில் விளையாட என்னுடைய நண்பர் கேன் வில்லியம்சன் இருக்கிறார். அவருக்கு நீங்கள் தொடர்ந்து சப்போர்ட் செய்ய வேண்டும்” என்று அவர் பதிவிட்டுள்ள ஒரு கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சன்ரைசர்ஸ் அணி 4 வீரர்களாக வில்லியம்சன், ரஷீத் கான் மற்றும் 2 இந்திய வீரர்களையே தக்கவைக்கும் என்றும் கூறப்படுகிறது.
Also Read: T20 World Cup 2021
இதன் காரணமாக வில்லியம்சன்-யை சப்போர்ட் செய்யுங்கள் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னர் சன் ரைசர்ஸ் அணி அவரை வெளியேற்றும் பட்சத்தில் நிச்சயம் இந்த ஆண்டு புதிதாக இணையும் இரண்டு அணிகளில் ஒன்றில் அவர் துவக்க வீரராகவும், கேப்டனாகவும் விளையாடுவார் என்று கிரிக்கெட் நிபுணர்கள் பலர் தங்களது கருத்துகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.