PAK vs ENG, 1st Test: பந்துவீச்சாளர்களை பந்தாடும் பாகிஸ்தான்; தடுமாறும் இங்கிலாந்து!

Updated: Tue, Oct 08 2024 12:57 IST
Image Source: Google

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷஃபீக்- சைம் அயூப் களமிறங்கினர். இதில் சைம் அயூப் 4 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ஷான் மசூத், ஷஃபீக்குடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். அதன்பின் ஷஃபீக் 102 ரன்களிலும், கேப்டன் மசூத் 151 ரன்னில் என வெளியேறினார்.

இதனையடுத்து பாபர் அசாம்- சகீல் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் 30 ரன்களை மட்டுமெ எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 328 ரன்கள் குவித்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை சௌத் சகீல் 35 ரன்களுடனும், நசீம் ஷா ரன்கள் ஏதுமின்றியும் தொடங்கினர். 

இதில் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்ததுடன், இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களையும் கடந்தது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சௌத் சகீல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த நஷீம் ஷா ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 33 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அணியின் நட்சத்திர வீரர் முகமது ரிஸ்வானும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இதனால் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் சௌத் சகீல் 67 ரன்களுடன் களத்தில் உள்ளார். இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன், ஜேக் லீச் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளனர். 

பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: ஷான் மசூத் (கேப்டன்), சவுத் ஷகீல், சைம் அயூப், அப்துல்லா ஷபீக், பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான், சல்மான் அலி ஆகா, அமீர் ஜமால், ஷஹீன் ஷா அஃப்ரிடி, நசீம் ஷா, அப்ரார் அகமது.

Also Read: Funding To Save Test Cricket

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப் (கே), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ், ஜேக் லீச், ஷோயப் பஷீர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை