கடுமையான உழைப்பால் சிறப்பாக பந்துவீசுகிறேன் - முகமது ஷமி!

Updated: Tue, Mar 29 2022 13:05 IST
Image Source: Google

மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் லக்னோ அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த லக்னௌ 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சோ்த்தது. முகமது ஷமி 3, வருண் ஆரோன் 2, ரஷீத் கான் 1 விக்கெட் எடுத்தனா். 

அடுத்து விளையாடிய குஜராத் 19.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் அடித்து வென்றது. ராகுல் தெவாட்டியா 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 40 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். ஆட்ட நாயகன் விருது ஷமிக்கு வழங்கப்பட்டது. 

இந்த ஆட்டத்தின் முதல் பந்திலேயே லக்னெள அணியின் கேப்டன் ராகுலை வீழ்த்தினார் ஷமி. பவர்பிளேயில் மூன்று ஓவர்கள் வீசி 10 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

தனது பந்துவீச்சு பற்றி பேசிய அவர், “நான் நன்கு பயிற்சியெடுத்து வந்துள்ளேன். இதுபோன்ற ஆடுகளம் இருக்கும்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த நீளத்தில் வீசுவீர்களோ அதே நீளத்தில் வீசவேண்டும். மிகவும் புதிதான ஆடுகளம். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நன்குப் பந்துவீச கடுமையாக உழைத்தேன். 

அதன்பிறகு தான் நான் நினைத்தவாறு பந்துவீச முடிந்தது. முதல் மூன்று ஓவர்களுக்குப் பிறகு அப்படியே நான்காவது ஓவரை வீசுகிறீர்களா என பாண்டியா கேட்டார். இல்லை, கடைசியாக வீசுகிறேன் என்றேன். ராகுலை வீழ்த்திய முதல் பந்தில் நல்லவிதமாகப் பந்துவீசவே நினைத்தேன். 

பந்து உங்கள் கைகளில் இருந்து அருமையாக வெளியேறும்போது கடவுளின் பரிசு எனக் கூறுவார்கள். அப்படி அல்ல. இதற்காக நான் உழைத்துள்ளேன்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை