சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் நெதர்லாந்து கேப்டன்!

Updated: Mon, Jun 20 2022 12:44 IST
Image Source: Google

நெதர்லாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டுவந்தவர் பீட்டர் சீலர். தற்போது 34 வயதான பீட்டர் சீலார் 2006 முதல் நெதர்லாந்து அணிக்காக விளையாடி வருகிறார். ஆல்ரவுண்டராக அணியில் முக்கிய பங்காற்றினார். 

மேலும் 57 ஒருநாள் போட்டியில் விளையாடி 57 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 77 போட்டிகளில் விளையாடி 58 விக்கெட்டுகளை எகானமி 6.83 என்ற விதத்தில் சிறப்பாக பந்து வீசியுள்ளார். பேட்டிங்கில் 591 ரன்களையும் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 96 ரன்களை எடுத்துள்ளார்.  

2009, 2014 டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணியை தோற்கடித்த  நெதர்லாந்து அணியில் இடம் பெற்றவர் சீலார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் அவர் தற்போது காயம் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “ கடந்த 2020 முதல் முதுகு வலியால் அவதிப்பட்டு வருகிறேன். இனிமேலும் என்னால் முடிந்ததை கொடுக்க முடியவில்லை” என பீட்டர் சீலார் கூறினார். 

பீட்டர் சீலாருக்கு அடுத்து நெதர்லாந்தின் விக்கெட் கீப்பர் ஸ்காட் எட்வர்ட்ஸ் கேப்டன்சி பொறுப்பை ஏற்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. 

TAGS

அதிகம் பார்க்கப்பட்டவை