நெதர்லாந்து vs அயர்லாந்து, முதல் ஒருநாள்: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் குறிப்பு!

Updated: Tue, Jun 01 2021 11:04 IST
Image Source: Google

நெதர்லாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்து செல்லவுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி உட்ரெக்ட்டில் உள்ள ஸ்போர்ட் பார்க் மார்ஷல் கர்வீர்ட் மைதானத்தில் நாளை மறுநாள் (ஜூன் 2) நடைபெறுகிறது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் : அயர்லாந்து vs நெதர்லாந்து
  • இடம் : ஸ்போர்ட் பார்க் மார்ஷல் கர்வீர்ட், உட்ரெக்ட்
  • நேரம் : மதியம் 2 மணி

போட்டி முன்னோட்டம்

நெதர்லாந்து அணி

நெதர்லாந்து அணி இந்த மாத தொடக்கத்தில் ஸ்காட்லாந்து அணியுடனான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் நெதர்லாந்து அணி 2-1 என்ற கணக்கில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியுள்ளது. 

நெதர்லாந்து அணியின் மேக்ஸ் ஓடவுட், ஸ்டீபன் மைபர்க் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் இருப்பது அணிக்கு பலமாக அமைந்துள்ளது. அதேசமயம் விவியன் கிங்மேன், பீட்டர் சீலர், லோகன் வான் ஆகியோர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்தி வருவதால், நிச்சயம் அயர்லாந்து அணிக்கு சவாலளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

அயர்லாந்து அணி

அயர்லாந்து அணி கடந்த 4 மாதங்களாக எந்த ஒரு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறது. முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியுடனான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்து ஒயிட் வாஷ் ஆனது. 

அயர்லாந்து அணியைப் பொறுத்தவரை சீனியர் வீரர்களான பால் ஸ்டிர்லிங், வில்லியம் போர்ட்டர்பீல்ட், கெவி ஓ பிரையன் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் இருப்பது அணிக்கு வலிமையைத் தருகிறது. 

பந்துவீச்சில் கிரேக் யங், பேரி மெக்கார்த்தி சிறப்பாக செயல்பட்டு வருவதால், அயர்லாந்து அணி இத்தொடரை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

நேருக்கு நேர்

இதுவரை இரு அணிகளும் 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் அயர்லாந்து அணி 7 முறையும், நெதர்லாந்து அணி ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளது. மேலும் 2 போட்டிகள் முடிவில்லாமல் உள்ளது. 

உத்தேச அணி

நெதர்லாந்து: ஸ்டீபன் மைபர்க், மேக்ஸ் ஓடவுட், பென் கூப்பர், பீட்டர் சீலார் (கே), ஸ்காட் எட்வர்ட்ஸ், லோகன் வான் பீக், டிம்ம் வான் டெர் குக்டன், பிராண்டன் குளோவர், விவியன் கிங்மா, டோபியாஸ் வைசி, பிலிப் போய் சேவின்

அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி (கே), கிரேம் மெக்கார்டர், ஹாரி டெக்டர், ஜார்ஜ் டோக்ரெல், லோர்கன் டக்கர் , மார்க் அடேர், சிமி சிங், ஆண்டி மெக்பிரைன், ஜோசுவா லிட்டில், கிரேக் யங்.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - ஸ்காட் எட்வர்ட்ஸ்
  • பேட்ஸ்மேன்கள் - மேக்ஸ் ஓ டவுட், ஸ்டீபன் மைபர்க், பால் ஸ்டிர்லிங், கெவின் ஓ பிரையன், வில்லியம் போர்ட்டர்பீல்ட்
  • ஆல்ரவுண்டர்கள் - பீட்டர் சீலார், லோகன் வான் பீக்
  • பந்து வீச்சாளர்கள் - விவியன் கிங்மா, கிரேக் யங், பேரி மெக்கார்த்தி
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை