நெதர்லந்து vs அயர்லாந்து, மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Mon, Jun 07 2021 06:56 IST
Image Source: Google

அயர்லாந்து அணி, நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று சமநிலையில் உள்ளன. 

இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி உட்ரெக்ட்டில் உள்ள ஸ்போர்ட் பார்க் மார்ஷல் கர்வீர்ட் மைதானத்தில் நாளை (ஜூன் 7) நடைபெறுகிறது.

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் : அயர்லாந்து vs நெதர்லாந்து
  • இடம் : ஸ்போர்ட் பார்க் மார்ஷல் கர்வீர்ட், உட்ரெக்ட்
  • நேரம் : மதியம் 2 மணி

போட்டி முன்னோட்டம்

நெதர்லாந்து அணி

அயர்லாந்து அணியுடனான இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து அணி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியைத் தவிர்த்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ரன் எடுக்க தவறி வருவதால் அந்த அணி தோல்வியை சந்தித்து வருகிறது. 

இதே நிலை நீடித்தால் நெதர்லாந்து அணி தொடரை இழக்கும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

அயர்லாந்து அணி

நெதர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி பேட்டிங், பந்து வீச்சு என இரண்டிலும் அசத்தி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுள்ளது. அதிலும் பால் ஸ்டிர்லிங், கேப்டன் பால்பிர்னி ஆகியோர் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

வெற்றி பெற்ற உத்வேகத்துடன் களமிறங்கும் அயர்லாந்து அணி நிச்சயம் எதிரணிக்கு சவாலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

உத்தேச அணி

நெதர்லாந்து - மேக்ஸ் ஓடவுட், ஸ்டீபன் மைபர்க், பென் கூப்பர், பீட்டர் சீலார் (கே), ஸ்காட் எட்வர்ட்ஸ், பாஸ் டி லீட், லோகன் வான் பீக், சாகிப் சுல்பிகர், பிராண்டன் குளோவர், டிம் வான் டெர் குக்டன், பிரெட் கிளாசென்.

அயர்லாந்து - பால் ஸ்டிர்லிங், வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட், ஆண்ட்ரூ பால்பிர்னி (கே), ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர் , சிமி சிங், ஜார்ஜ் டோக்ரெல், கிரேக் யங், ஆண்டி மெக்பிரைன், ஜோசுவா லிட்டில், பாரி மெக்கார்த்தி. 

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள்- ஸ்காட் எட்வர்ட்ஸ்
  • பேட்ஸ்மேன்கள் - மேக்ஸ் ஓ டவுட், பால் ஸ்டிர்லிங் , ஆண்டி பால்பிர்னி
  • ஆல்ரவுண்டர்கள் - பீட்டர் சீலார், சிமி சிங், ஆண்டி மெக்பிரைன்
  • பந்து வீச்சாளர்கள் - லோகன் வான் பீக், டிம் வான் டெர் குக்டன், கிரேக் யங்.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை