நமீபியா vs நெதர்லாந்து, டி20 உலகக்கோப்பை, ரவுண்ட் 1 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Mon, Oct 17 2022 22:43 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடரின் 8ஆவது சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றிருக்கும் இத்தொடரில் தற்போது, தரவரிசையில் கடைசி எட்டு இடங்களில் இருக்கும் அணிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் நாளை நடைபெறும் போட்டியில் நமீபியா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டி ஜீலாங்கில் உள்ள சைமண்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. 

முன்னதாக நமீபியா நடப்பு உலகக்கோப்பை தொடரில் வலிமை வாய்ந்த இலங்கை அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்த உற்சாகத்துடன் களமிறங்குகிறது. அதிலும் ஃபிரைலிங், ஜேஜே ஸ்மித் ஆகியோர் பேட்டிங் பவுலிங் என கலக்கி வருவது அணிக்கு கூடுதல் பலத்தை அதிகரித்துள்ளது. 

அதேபோல் நெதர்லாந்து அணியும் ஐக்கிய அரபு அமீரக அணியுடன் த்ரில் வெற்றியைப் பெற்று அசத்தியது. அந்த அணியில் பந்துவீச்சை பொறுத்தவரையில் பாஸ் டி லீட், கிளசென் ஆகியோர் அபாரமாக செயல்பட்டு வருகின்றனர்.

அதற்கேற்றது போல் பேட்டிங்கில் மேக்ஸ் ஓடவுட், விக்ரம்ஜித் சிங், டாம் கூப்பர் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் நெதர்லாந்து அணியும் கடும் போட்டிபோடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இப்போட்டியில் வெற்றிபெறும் அணி சூப்பர் 12 சுற்றுக்குள் செல்லும் வாய்ப்பை பிரகாசப்படுத்தும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - நெதர்லாந்து vs நமீபியா
  • இடம் - சைமண்ட்ஸ் மைதானம், ஜீலாங்
  • நேரம் - காலை 9.30 மணி

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 02
  • நமீபியா - 1
  • நெதர்லாந்து -1

உத்தேச அணி 

நமீபியா: மைக்கேல் வான் லிங்கன், திவான் லா காக், ஸ்டீபன் பார்ட், ஜான் நிகோல் லோஃப்டி-ஈடன், ஜெர்ஹார்ட் எராஸ்மஸ்(கே), ஜான் ஃப்ரைலின்க், ஜேஜே ஸ்மிட், டேவிட் வைஸ், ஜேன் கிரீன், பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ், பென் ஷிகோங்கோ

நெதர்லாந்து: மேக்ஸ் ஓடோவ்ட், விக்ரம்ஜித் சிங், பாஸ் டி லீடே, டாம் கூப்பர், கொலின் அக்கர்மேன், ஸ்காட் எட்வர்ட்ஸ்(கே), ரோலோஃப் வான் டெர் மெர்வே, டிம் பிரிங்கிள், லோகன் வான் பீக், பிரெட் கிளாசென், பால் வான் மீகெரென்

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - ஸ்காட் எட்வர்ட்ஸ்
  • பேட்டர்ஸ் - மேக்ஸ் ஓடோவ்ட், டாம் கூப்பர், ஸ்டீபன் பார்ட்
  • ஆல்-ரவுண்டர்கள் - பாஸ் டி லீடே, ஜெர்ஹார்ட் எராஸ்மஸ், ஜான் ஃப்ரைலின்க்
  • பந்துவீச்சாளர்கள் - பிரெட் கிளாசென், டிம் பிரிங்கிள், பெர்னார்ட் ஷால்ட்ஸ், ஜேஜே ஸ்மிட்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை