சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து நியூசிலாந்து வீராங்கனை ஓய்வு!
நியூசிலாந்து மகளிர் அணி ஆல்ரவுண்டர் அன்னா பீட்டர்சன். நியூசிலாந்து அணிக்காக கிட்டத்தட்ட 9 ஆண்டுகளில் 32 ஒருநாள், 33 டி20 போட்டிகளில் பீட்டர்சன் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் தற்போது 31 வயதாகும் அவர், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அன்னா பீட்டர்சன், “நியூசிலாந்து அணிக்காக விளையாடிய ஒவ்வொரு நிமிடமும் எனக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான ஒன்று. இதனை சாத்தியப்படுத்த உதவிய குடும்பத்தினர், நண்பர்கள், பயிற்சியாளர்கள், சக அணி வீராங்கனைகளுக்கு எனது நன்றி. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
முன்னதாக கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 போட்டியின் போது ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து அன்னா பீட்டர்சன் அசத்தினார். இதன் மூலம் நியூசிலாந்து மகளிர் அணி தரப்பில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீராங்கனை எனும் சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.