துபாய் சென்றடைந்த நியூசிலாந்து வீரர்கள்!

Updated: Sun, Sep 19 2021 11:19 IST
New Zealand Arrive In Dubai After Pulling Out Of Pakistan Tour Last Minute
Image Source: Google

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் நடைபெற இருந்தது. மேலும் 18 ஆண்டுகளுக்கு பிற்கு நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்ததால், இத்தொடரின் மீதான எதிர்பர்ப்புகள் அதிகரித்திருந்தது. 

இந்நிலையில் செப்டம்பர் 17ஆம் தேதி ராவல்பிண்டியில் நடைபெற இருந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் பாதுகாப்பு காரணங்களுக்காக இத்தொடரை ரத்து செய்வதாக அறிவித்தது.

இதனால் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நியூசிலாந்தின் இச்செயல் குறித்து விசாரிக்க ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகாரளித்துள்ளது. 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இந்நிலையில், பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து அணி வீரர்கள் தனி விமானம் மூலம் துபாய் வந்தடைந்துள்ளனர். இதனை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் உறுதிசெய்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை