நியூசிலாந்தின் முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட்டை கொன்றது- அக்தர் காட்டம்

Updated: Fri, Sep 17 2021 20:25 IST
Image Source: Google

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் இன்று நடைபெற இருந்தது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் பாதுகாப்பு காரணங்களினால் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இத்தொடரை ரத்துசெய்வதாக அறிவித்தது.

மேலும் தங்கள் நாட்டு வீரர்களை பாதுகாப்பாக நாடு திரும்பவும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் சர்வதேச கிரிக்கெட் அரங்கி பூதாகரமாக வெடித்துள்ளது. ஏனெனில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் அணியுடனான தொடரை ரத்து செய்யும் நோக்கில் ஆலோசனையில் ஈடபடத்தொடங்கியுள்ளது.

இந்நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட்டை கொன்றதாக அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் சோயப் அக்தர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அக்தர் தனது ட்விட்டர் பதிவில், “நியூசிலாந்து பாகிஸ்தான் கிரிக்கெட்டை கொன்றது. கிறிஸ்ட்சர்ச் தாக்குதலில் 9 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் அப்படி இருந்தும் பாகிஸ்தான் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்தது. 

மேலும் இது ஒரு சரிபார்க்கப்படாத அச்சுறுத்தல். இது விவாதிக்கப்பட்டிருக்கலாம். பிரதமர் இம்ரான் கான், நியூசிலாந்துடன் தனிப்பட்ட முறையில் பேசி உறுதியளித்தார். அப்படி இருந்தும் இத்தொடர் தற்போது ரத்துசெய்யப்பட்டது. 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

அதேபோல் இதற்கு முன்னதாக பாகிஸ்தான்,  தென்ஆப்பிரிக்கா, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் பிஎஸ்எல் ஆகியவற்றை பாதுகாப்பாக நடத்தியுள்ளதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்” என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை