NZ vs SA: நியூசிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு; வில்லியம்சன், ரவீந்திராவுக்கு இடம்!

Updated: Fri, Jan 26 2024 12:28 IST
NZ vs SA: நியூசிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு; வில்லியம்சன், ரவீந்திராவுக்கு இடம்! (Image Source: Google)

நியூசிலாந்து அணி சமீபத்தில் பாகிஸ்தான் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட இத்தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து நியூசிலாந்து அணி தங்களுடையை சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. 

அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடர் வரும் பிப்ரவரி மாத 4ஆம் தேதி தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டு சில சர்ச்சைகளை கிளப்பியது. காரணம் அந்த அணியின் பெரும்பாலான வீரர்கள் தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரில் விளைடாடிவருவதன் காரணமாக நிறைய அனுபவ வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் கிரிக்கெட்டின் அழிவிற்க்கு முன் உதாரணமாக மாறியுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.

இந்நிலையில் இத்தொடருக்கான நியூசிலாந்து அணியும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் தொடரின் போது காயமடைந்து தொடரிலிருந்து விலகிய கேப்டன் கேன் வில்லியம்சன் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இருப்பினும் அவருக்கு பதிலாக அணியின் கேப்டனாக டிம் சௌதீ அணியை வழிநடத்தவுள்ளார். அதேசமயம் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரச்சின் ரவீந்திராவிற்கு தற்போது டெஸ்ட் தொடரிலும் இடம் கிடைத்துள்ளது. 

மேலும் காயத்திலிருந்து மீண்டுள்ள கைல் ஜேமிசனுடன் சேர்த்து, அறிமுக வீரரான வில் ஓ ரூர்க்கிற்கும் இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது. இவர்களுடன் நட்சத்திர வீரர்கள் மிட்செல் சாண்ட்னர்,நீல் வாக்னர், டெவான் கான்வே, டேரில் மிட்செல், மேட் ஹென்றி ஆகியோருக்கும் இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

நியூசிலாந்து அணி: டிம் சௌதீ (கேப்டன்), டாம் ப்ளூன்டெல், டெவான் கான்வே, மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், டாம் லேதம், டேரில் மிட்செல், வில் ஓ ரூர்க், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், நீல் வாக்னர், கேன் வில்லியம்சன், வில் யங்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை