உலகக்கோப்பை 2023: நியூசிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவு; முக்கிய வீரருக்கு அறுவை சிகிச்சை!

Updated: Wed, Sep 20 2023 13:51 IST
உலகக்கோப்பை 2023: நியூசிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவு; முக்கிய வீரருக்கு அறுவை சிகிச்சை! (Image Source: Google)

இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் ஆட உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது.

இந்த தொடருக்காக கேன் வில்லியம்சன் தலைமையிலான 15 போ் கொண்ட நியூசிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதியும் இடம்பெற்றுள்ளார். இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக கடந்த வாரம் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடிய நியூசிலாந்தின் டிம் செளதிக்கு வலது கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது.

மேலும், மருத்துவர்களின் பரிந்துரைப்படி, டிம் செளதியின் வலது கட்டை விரலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அறுவை சிகிச்சை முடிந்த பிறகு அடுத்த வாரத்தில் உலகக் கோப்பை அணியில் டிம் செளதி இடம்பெறுவாரா, மாட்டாரா என்பது குறித்து தெரிவிக்கப்படும் என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள டேரில் மிட்செலுக்கு காயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டிம் சௌதீயும் காயம் காரணமாக விளையாடுவார? மாட்டாரா? என்ற சந்தேகம் அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை