பயோ பபுளை உடைத்த நியூசிலாந்து வீரர்கள்; பிசிசிஐ குற்றச்சாட்டு!

Updated: Thu, Jun 17 2021 10:21 IST
Image Source: Google

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை (ஜூன் 18) இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய வீரர்கள், போட்டி நடைபெற உள்ள மைதானத்துக்கு அருகில் இருக்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டு, பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், நியூஸிலாந்து வீரர்கள் சிலர் பயோ பபுளை மீறி வெளியே சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று அந்த அணியின் டிம் சௌதி, ட்ரெண்ட் போல்ட், அணியின் பிசியோ டாமி சிம்செக் உள்ளிட்ட ஆறு நபர்கள் விடுதிக்கு அருகிலுள்ள கோல்ஃப் மைதானத்திற்கு சென்று விளையாடியதாக கூறப்படுகிறது.

இதனால் அவர்கள் பயோ பபுள் விதியை மீறியதாக கூறி, ஐசிசியிடம் பிசிசிஐ மேலாளர் முறையிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த ஐசிசி, தனிமைப்படுத்துதல் காலம் முடிந்த பின்னர் வீரர்கள் அனைவரும் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்றும், இந்த விதிமுறை இந்திய அணி வீரர்களுக்கும் பொருந்தும் என்றும் பதிலளித்துள்ளது.

இந்திய அணிக்கு முன்பாகவே இங்கிலாந்துக்கு சென்ற நியூஸிலாந்து அணி வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு பின்புதான், இங்கிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட  டெஸ்ட் தொடரில் விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை