NZ vs SA, 2nd Test: இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம்!

Updated: Sun, Feb 27 2022 12:10 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 276 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

இந்நிலையில், 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில்  பேட்டிங் தேர்வு செய்தது . அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.

இதையடுத்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆடியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். இதனால் நியூசிலாந்து 91 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

6ஆவது விக்கெட்டுக்கு மிட்செல், கிராண்ட்ஹோம் ஜோடி சேர்ந்தது. 133 ரன்கள் சேர்த்த நிலையில் மிட்செல் 60 ரன்னில் அவுட்டானார்.

இருபினும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காலின் டி கிராண்ட்ஹொம் சதமடித்து அசத்தினார். இறுதியில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 293 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக கிராண்ட் ஹோம் 120 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட்டும், ஜேன்சன் 4 விக்கெட்டும் கைப்பற்றினர். 

இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்களை மட்டுமே எடுத்தது.

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கெய்ல் வெர்ரெய்ன் 22 ரன்களுடனும், வியான் முல்டர் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் டிம் சௌதி, நெய்ல் வாக்னர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை