நியூசிலாந்து vs இந்தியா, இரண்டாவது டி20: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Sat, Nov 19 2022 20:31 IST
Image Source: Google

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் அடங்கிய டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இத்தொடருக்கான இந்திய டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியாவும், ஒருநாள் அணிக்கு ஷிகர் தவானும் கேப்டனாக பணியாற்ற உள்ளனர்.

அதன்படி இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது . இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை மவுண்ட் மாங்குனியில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. சமீபத்தில் இவ்விரு அணிகளும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் அரைஇறுதியுடன் வெளியேறிய பிறகு விளையாடப்போகும் முதல் தொடர் இதுவாகும்.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - நியூசிலாந்து vs இந்தியா
  • நேரம் - பே ஓவல், மவுண்ட் மாங்குனி
  • நேரம் - மதியம் 12 மணி (இந்திய நேரப்படி)

போட்டி முன்னோட்டம்

இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், அஸ்வின், முகமது ஷமி, தினேஷ் கார்த்திக் ஆகிய முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் படை களத்தில் குதிக்கிறது. சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர், பந்த் போன்ற அதிரடி சூரர்கள் கவனத்தை ஈர்க்கிறார்கள். 

உலக கோப்பையில் கலக்கிய சூர்யகுமாருக்கு, 20 ஓவர் கிரிக்கெட்டில் ஓராண்டில் அதிக ரன்கள் குவித்தவரான முகமது ரிஸ்வானின் (பாகிஸ்தான்) சாதனையை தகர்க்க இன்னும் 286 ரன்கள் தேவைப்படுகிறது. இந்த தொடரில் அதை நெருங்குவதற்கு வாய்ப்புள்ளது.

பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், புயல்வேக பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் உள்ளிட்டோர் வலு சேர்க்கிறார்கள். அடுத்த 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு இளம் வீரர்களை கொண்டு வருவதற்கான முதற்படிக்கட்டாக இந்த தொடர் இருக்கும்.

அதேசமயம், கேன் வில்லியம்சன் தலைமையில் நியூசிலாந்தும் வலுவான அணியாக களம் இறங்குகிறது. டி20 உலக கோப்பையில் விளையாடிய வீரர்களில் டிரென்ட் பவுல்ட், மார்ட்டின் கப்தில் ஆகியோருக்கு மட்டுமே அணியில் இல்லை.

மற்றபடி பேட்டிங்கில் டெவான் கான்வே, ஃபின் ஆலென், கிளென் பிலிப்ஸ், கேப்டன் வில்லியம்சன், டேரில் மிட்செல், பந்து வீச்சில் லோக்கி ஃபர்குசன், டிம் சவுதி, சான்ட்னெர் மிரட்ட காத்திருக்கிறார்கள். உள்ளூர் சூழல் அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 20
  • இந்தியா - 09
  • நியூசிலாந்து - 09
  • முடிவில்லை - 02

போட்டியை எப்படி காணுவது?

இப்போட்டிக்கான டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் ஓடிடி தளம் பெற்றுள்ளது. இந்திய ரசிகர்கள் இந்த போட்டியை தூர்தர்ஷனிலும் கண்டுகளிக்கலாம்.

உத்தேச அணி

நியூசிலாந்து - ஃபின் ஆலன், டெவன் கான்வே, கேன் வில்லியம்சன், க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, ஆடம் மில்னே, லாக்கி பெர்குசன், பிளேயர் டிக்னர்

இந்தியா – ஷுப்மான் கில், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், தீபக் ஹூடா/வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை