கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த ராஸ் டெய்லர்!
நியூசிலாந்தின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் ராஸ் டெய்லர். தற்போது 37 வயதாகும் ராஸ் டெய்லர், இதுவரை 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் நியூசிலாந்திற்காக அதிக ரன் எடுத்த வீரரும் இவர் தான்.
கடந்த 2006ஆம் ஆண்டு நிசிலாந்து ஒருநாள் அணிக்காக அறிமுகான டெய்லர், 2007ஆம் ஆண்டு டெஸ்ட் அறிமுகம் கண்டார். உலக பேட்டர்களை நடுங்கச் செய்யும் பெர்த் பிட்சில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 290 ரன்கள் எடுத்ததே இவரது அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர்.
இந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டின் உச்சமான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றி ரன்களை இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து எடுத்த போது கேப்டன் கேன் வில்லியம்சனுடன் களத்தில் இருந்தார் ராஸ் டெய்லர். 2023 உலகக்கோப்பை வரை இருப்பேன் என்றார், ஆனால் திடீரென இப்போது வங்கதேச தொடருடன் டெஸ்ட் போட்டிகளிலும், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்துவுடனான 6 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடிய பிறகு ஓய்வு பெற போவதாக அவர் கூறியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 7584 ரன்களையும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 8,581 ரன்களையும் எடுத்துள்ள ராஸ் டெய்லர், ஒருநாள் போட்டிகளில் 21 சதங்களையும், அனைத்து வடிவங்களிலும் 40 சதங்களையும் எடுத்துள்ளார். 102 டி20 சர்வதேசப் போட்டிகளில் 1909 ரன்களை எடுத்துள்ளார். மொத்தமாக அனைத்து டி20 வடிவங்களிலும் 292 போட்டிகளில் 6429 ரன்களைக் குவித்துள்ளார்.