ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலடி கொடுத்த நிக்கோலஸ் பூரன்!

Updated: Mon, Aug 14 2023 17:05 IST
Image Source: Google

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தத் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 3-2 எனக் கைப்பற்றி அசத்தி இருக்கிறது. 17 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் ஒரு கிரிக்கெட் தொடரை பரிதாபமாக இழந்திருக்கிறது.

இந்தத் தொடரில் சூரியகுமார் மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா தவிர பேட்டிங் யூனிட்டில் இருந்தவர்கள் சர்வதேச அனுபவம் மற்றவர்களான இளம் வீரர்களாகவே இருந்தார்கள். அனுபவம் இன்மை அவர்களது ஆட்டத்தின் வழியாக தெளிவாகத் தெரிந்தது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது. இதற்கு அடுத்து இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்திருந்தது. நேற்றைய போட்டியில் வென்றிருந்தால் உலகச் சாதனை ஒன்றை இந்திய அணி படைத்திருக்கும். 

அதாவது முதல் இரண்டு போட்டிகளை தோற்று ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை எந்த அணியும் வென்றது கிடையாது. இப்படியான நிலையில் கேப்டன் ஹர்திக் பாண்டியா மூன்றாவது போட்டியை வென்ற பொழுது, நிக்கோலஸ் பூரன் அடிப்பதாக இருந்தால் என்னை அடிக்கட்டும். நான் இப்படியான போட்டிகளை விரும்புகிறேன். அவர் எப்படியும் நான்காவது போட்டியில் என்னை இதற்காக தொடர்ந்து வருவார் என்று கூறியிருந்தார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nicholas Pooran (@nicholaspooran)

நான்காவது போட்டியில் குல்தீப் யாதவ் பந்தை அடித்து ஆட முயன்று பூரன் ஸ்டெம்பிங் ஆகி இருந்தார். இந்த நிலையில் ஐந்தாவது போட்டியில் 35 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து வெற்றிக்கு ஒரு தூணாக ஒரு முனையில் நின்றார். இந்த போட்டியில் அவர் ஹர்திக் பாண்டியா வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை பறக்க விட்டார்.

தற்பொழுது பூரன் இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக வைத்திருக்கிறார். மேலும் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலடி தரும் விதமாக வாயை ஜிப் கொண்டு மூடும் விதமாக சைகை செய்தும், அவருக்கு அருகில் இருந்த அகீல் ஹொசைன் பறக்கும் முத்தத்தை தருவது போலவும் காணொளியை வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் பதிந்திருக்கிறார்கள். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by WINDIES Cricket (@windiescricket)

இந்த தொடர் முழுக்க இந்திய அணி பரிசோதனை என்ற பெயரில் இளம் வீரர்களை பயன்படுத்தி புதிய அணியை உருவாக்க நினைத்தது சரியான ஒன்றாகத்தான் இருந்தது. ஆனால் கேப்டன்சி முடிவுகளில் ஹர்திக் பாண்டியா அடிப்படையிலேயே சில தவறுகளை செய்தது பெரிய பின்னடைவை கொடுத்துவிட்டது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை