வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக நிகோலஸ் பூரன் நியமனம்

Updated: Tue, May 03 2022 20:40 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒருநாள் போட்டி மற்றும் டி 20 போட்டிகளில் அதிரடியாக ஆடி ஆல்ரவுண்டராக செயல்பட்டு வந்தவர் கீரன் பொல்லார்டு. இவர் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டனாக  செயல்பட்டு வந்தவர் கெய்ரன் பொல்லார்டு. இந்நிலையில் இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த மாதம் அறிவித்தார்.

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணியின் டி20 மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனாக நிகோலஸ் பூரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள நிக்கோலஸ் பூரன், “வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது எனக்கு உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கு அற்புதமான பாரம்பரியத்தை உருவாக்கிய பல ஜாம்பவான்களின் அடிச்சுவடுகளை நான் பின்பற்றுகிறேன். 

கேப்டனாக நியமிக்கப்பட்டதே இதுவரையிலான எனது தொழில் வாழ்க்கையின் சிறப்பம்சமாகும், மேலும் எங்கள் ரசிகர்கள் மற்றும் விசுவாசமான ஆதரவாளர்களுக்காக களத்தில் சிறந்த விஷயங்களைச் செய்ய அணியை முன்னோக்கி கொண்டு செல்ல விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இதுவரை 37 ஒருநாள், 57 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள நிக்கோலஸ் பூரன் இரண்டாயிரத்துக்கும் அதிகமான ரன்களைக் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை