வார்னரின் ஆல் டைம் ஐபிஎல் லெவன்; கெயில், ஏபிடிக்கு இடமில்லை!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர். இவர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக கடந்த 2015ஆம் ஆண்டு முதல் விளையாடிவருகிறார்.
மேலும் 2016ஆம் ஆண்டு ஹைதராபாத் அணிக்கு கோப்பையையும் தேடிக்கொடுத்து அசத்தினார். ஒவ்வொரு ஆண்டும் அதிக ரன்களை விளாசியவர் பட்டியலில் தவறாமல் இடம்பிடித்து வந்த டேவிட் வார்னர், கடந்த சில ஆண்டுகளாகவே பேட்டிங்கில் சோதப்பினார்.
இதனால் நடப்பு ஐபிஎல் சீசனில் அவரது கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டு, அணியிலிருந்தும் வெளியேற்றப்பட்டார். இதையடுத்து அவர் அடுத்த ஐபிஎல் சீசனில் புதிய அணிக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டேவிட் வார்னர் தனது ஆல் டைம் ஐபிஎல் லெவனை அறிவித்துள்ளார். இவர் தனது அணியில் ஐபிஎல் ஜாம்பவான்களான கிறிஸ் கெயில், ஏபிடி வில்லியர்ஸ், லசித் மல்லிங்கா அகியோரை சேர்க்காமல் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வார்னரின் ஆல் டைம் ஐபிஎல் லெவன்: டேவிட் வார்னர், ரோஹித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ஹர்திக் பாண்டியா, கிளென் மேக்ஸ்வெல், எம்எஸ் தோனி, மிட்செல் ஸ்டார்க், ஜஸ்பிரித் பும்ரா, ஆஷிஷ் நெஹ்ரா, யுஸ்வேந்திர சாஹல்/குல்தீப் யாதவ்.