இப்போட்டியில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது - ஹர்திக் பாண்டியா!

Updated: Fri, Apr 14 2023 12:30 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்று  நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. மோசமான துவக்கத்திற்கு பிறகு, மேத்யூ ஷாட்(38), ஷாருக் கான்(22), ஷாம் கர்ரன்(22), ஜித்தேஷ் சர்மா(25) ஆகியோர் பேட்டிங்கில் நம்பிக்கையளிக்க, 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி தட்டுத்தடுமாறி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் அடித்தது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக முதல் போட்டியில் விளையாடிய மோகித் சர்மா, நான்கு ஓவர்களில் 18 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

154 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு துவக்க வீரர் சகா(30) மீண்டும் ஒருமுறை நல்ல துவக்க அமைத்துக்கொடுத்து வெளியேறினார். சாய் சுதர்சன்(19), ஹர்திக் பாண்டியா(8) இருவரின் விகவ்ட்டை தூக்கி பஞ்சாப் கிங்ஸ் அணி மீண்டும் ஆட்டத்திற்குள் வந்தது. ஆனால் சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 67 ரன்கள் அடித்துக்கொடுத்தார்.

மிகச் சிறப்பான துவக்கம் குஜராத் அணிக்கு கிடைத்த பிறகு, 154 ரன்களை விரைவில் எட்டி போட்டியை முடித்து விடுவார்கள் என நினைத்தபோது, பஞ்சாப் கிங்ஸ் அணி அபாரமான பந்துவீச்சு மூலம் ஆட்டத்தை கடைசி ஓவர்வரை எடுத்துச் சென்றது. பரபரப்பாக சென்ற இப்போட்டியில் குஜராத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

போட்டி முடிந்த பிறகு பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, “உண்மையில் போட்டியை கடைசி ஓவர் வரை எடுத்துச் சென்றதை நான் வரவேற்கவில்லை. இப்போட்டியில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது. விளையாட்டுப் போட்டிகளில், எப்போது என்ன நடக்கும் என்பதை எவரும் சொல்ல முடியாது. அதுதான் அழகு.

பஞ்சாப் கிங்ஸ் அணி மிகச்சிறப்பாகவே பந்துவீசினார்கள். அதற்கு என்னுடைய பாராட்டுக்கள் எங்களது பேட்ஸ்மேன்கள் சிலருக்கு அதிர்ஷ்டம் நன்றாக இருந்தது. இது போன்ற போட்டிகளில் ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச் செல்லவேண்டிய அவசியம் இல்லை  மிடில் ஓவர்களில் சில ஷாட்டுகள் அடித்து நம் பக்கம் மொத்தமாக திருப்புவதற்கு பார்க்க வேண்டும். இந்த பிட்ச் பேட்டிங் செய்வதற்கு சாதகமாகவே இருந்தது. அதனால் ரிஸ்க் எடுத்திருக்கலாம்.

எங்களுக்கு மோஹித் சர்மா மற்றும் அல்சாரி ஜோசப் இருவரும் மிகச்சிறப்பாக பந்து வீசினார்கள். இதில் எனக்கு எந்தவித ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் கடந்த ஓராண்டாக அவர்களது கடின உழைப்பை நான் பார்த்து வருகிறேன். இன்றைய போட்டியில் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்கள். மோஹித் சர்மா இந்த பிட்ச்சை நன்கு அறிந்தவர். அவரிடம் இருக்கும் பொறுமை மிகப்பெரியது. அனுபவம்மிக்க வீரர்கள் ஓராண்டாக வெளியில் அமர்ந்திருப்பதை விரும்பமாட்டார்கள். ஆனால் இவர் அணிக்கு என்ன தேவை என்பதை புரிந்துகொண்டு வாய்ப்புக்காக காத்திருந்தார். அதற்கு என்னுடைய பாராட்டுக்கள்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை