இந்தியாவை ஒயிட் வாஷ் செய்தது சதனைகளின் மகுடம் - டெம்பா பவுமா!

Updated: Mon, Jan 24 2022 14:48 IST
Not Easy To Captain A Dynamic South African Team, Says Temba Bavuma (Image Source: Google)

இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மீண்டும் ஒருமுறை இந்தியாவை வீழ்த்தி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. 

ஒரு கட்டத்தில், தீபக் சாஹர் தனது 54 ரன்களில் இலக்கை நெருங்கியதால், ஸ்லாக் ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா தோற்றிருக்கும், இருப்பினும், கடைசி இரண்டு ஓவர்களில் போராடி இந்தியாவை வீழ்த்தியது.

தென் ஆப்பிரிக்காவிற்கு இறுதியில் விஷயங்கள் கொஞ்சம் மோசமாக இருந்ததாக பவுமா ஒப்புக்கொண்டார், ஆனால் கடைசியில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக பேசிய அவர் “இறுதியில் ஆட்டத்தின் போக்கு கொஞ்சம் எங்களுக்கு எதிராக இருந்தன. வெற்றியை எங்கள் கையில் வைத்திருந்தோம் என்று நினைத்தபோது போதும் என்ற மனநிலை தோன்றியது இதனால் தோல்வியை நோக்கிப் போனோம். ஆனால் நாங்கள் மீண்டும் வர முடிந்தது.

வெற்றி மிகவும் திருப்தி அளிக்கிறது, இது ஒரு அணியாக எங்களுக்கு நிறைவேற்றப்பட்ட பணி, இந்தியாவுக்கு ஒயிட் வாஷ் என்ற பணி நிறைவேற்றப்பட்டது. பலர் எங்களை குறைவாகவே மதிப்பிட்டனர். வர்ணனைக் குழுவில் இருந்த சிலரிடமும் ஆதரவாளர்களைப் பெற்றுள்ளோம் என்று நம்புகிறேன்.

குயின்டன் டி காக் கிரேட், அவர் எவ்வளவு மதிப்புமிக்க சொத்து என்பதைக் காட்டுகிறார். ராஸியும் அபாரமாக ஆடினார். . மொத்தத்தில் பேட்டர்கள் நன்றாக ஆடினர். பந்துவீச்சிலும், இன்று தனித்தனியாக அல்ல, ஆனால் ஒரு அணியாக திரண்டு எழுந்தோம்.

எங்கள் பயணத்தில் இது ஒரு பெரிய சவாலாகவும் தடையாகவும் இருந்தது, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் இரண்டையும் வெல்வது எங்கள் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. டெஸ்ட் தொடர் நான் பங்கேற்ற கடினமான தொடர், இந்திய பந்துவீச்சாளர்கள் கடினமாக வீசி பல கேள்விகளை எழுப்பினர், பீல்டிங் தீவிரம் கூட அதிகமாக இருந்தது. 

ஒரு நாள் போட்டிகளிலும் அது எளிதானது அல்ல, மிகவும் சவாலானது. துணைக் கண்டம் போன்ற இந்த பிட்ச்களில் கூட ஒயிட்வாஷ் வெற்றி என்பது எங்கள் சாதனைகளில் இன்னொரு மகுடமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை