அணியின் கேப்டன் என்பது ஒரு பொறுப்பு மட்டுமே - கவுதம் கம்பீர்

Updated: Tue, Feb 01 2022 12:14 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், டெல்லி எம்.பி.யுமானவர் கவுதம் கம்பீர். இந்திய அணிக்காக பல முக்கிய வெற்றிகளை கம்பீர் பெற்று தந்துள்ளார். தற்போது லக்னோ அணியின் மெண்டராக உள்ள கம்பீர், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அதில், இந்திய அணியில் இருக்கும் பிரச்சினைகள் குறித்தும், விராட் கோலியின் கேப்டன்ஷிப் விவகாரம் குறித்தும் கம்பீர் பேசியுள்ளார். 

அப்போது பேசிய அவர், இந்திய அணியின் தோல்விக்கு நடுவரிசையில் இருக்கும் பிரச்சினைகளே காரணம். ஆனால் என்னை பொறுத்தவரை ஆல் ரவுண்டர், ஃபினிஷர் என்று எல்லாம் பார்க்க மாட்டேன். அது ஊடகங்கள் கூறும் வார்த்தைகள். எதிரணியை விட கூடுதலாக ரன் அடிக்க வேண்டும், எதிரணியின் விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்பதே என் கொள்கை. கிரிக்கெட் ஒரு சுலபமான விளையாட்டு. ஆனால் நீங்கள் தான் அதனை கடுமையானதாக எண்ணி கொள்கிறீர்கள்.

சிறு வயதில் இருந்தே இந்திய அணிக்காக விளையாட வேண்டும், இந்திய அணிக்காக வெற்றிகளை தேடி தர வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாக இருக்கும். அதில் எந்த மாற்றமும் இருக்காது. கேப்டனாக இருப்பது கூடுதல் பொறுப்பு மற்றும் கவுரவம் தான். கேப்டனாக தான் செயல்படுவேன் என்று சிறு வயதில் இருந்தே யாரும் கனவு காண மாட்டார்கள்.

விராட் கோலி கேப்டனாக இருந்தாலும் சரி, இல்லாட்டிலும் சரி அவர் அணிக்காக விளையாடி ரன் அடிக்க வேண்டும் என்பதையே முதன்மையான விசயமாக நினைப்பார் என்று நம்புகிறேன். கேப்டன் பதவியை விட்டு விலகியதால்,இனி முன்பு போல் விளையாடமல் போனால் அது சரியானது அல்ல. அவர் மாறிவிட்டால், எதோ தவறு நடக்கிறது என்றே அர்த்தம்.

விரட் கோலி கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டியிலும், 7 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியிலும் கேப்டனாக இல்லாமல் சாதாரண வீரராக களமிறங்குகிறார். இதனால் அவர் இனி முன்பை போல் விளையாட மாட்டாரா என்று ரசிகர்கள் மத்தியில் எழுந்த கேள்விக்கு, கம்பீர் தெளிவான பதிலையும், எச்சரிக்கையையும் தந்துள்ளார். விராட் கோலியின் ஆட்டம் பொறுத்தே இந்தியாவின் வெற்றி , தோல்வி இனி அமையும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை